மாட்டிறைச்சி கடையா? இந்து முன்னணி எதிர்ப்பால் அனுமதிக்காத போலீஸ் -போராட்டம் செய்த பியூஷ் மானுஷ் கைது
சேலம்: இந்து முன்னணியின் எதிர்ப்பு காரணமாக சேலத்தில் மாட்டிறைச்சி கடை நடத்த போலீசார் அனுமதி அளிக்காத நிலையில், கறிக்கடை உரிமையாள மற்றும் அவரது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்து உள்ளர் ஜலால்புரா பகுதியைச் சேர்ந்தவர் பாதுஷா மைதீன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் தனது வருமானத்தில் சேமித்து வைத்த பணத்தை கொண்டு சீலநாயக்கன்பட்டி சண்முகா நகர் பகுதியில் மாட்டிறைச்சி சில்லிகடை ஒன்றை நடத்த அவர் திட்டமிட்டார்.

இந்து முன்னணி எதிர்ப்பு
மாட்டிறைச்சி கடை தொடங்குவதற்கான முன்தொகையையும் கட்டிட உரிமையாளரிடம் பாதுஷா மைதீன் வழங்கி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் அப்பகுதியில் மாட்டிறைச்சி சில்லிகடை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அனுமதிக்காத போலீஸ்
அதன் அடிப்படையில் பாதுஷா மைதீன், மாட்டிறைச்சி கடை வைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிலையில் பாதுஷா மைதீன் சேலம் மாநகராட்சி அதிகாரியிடம் மாட்டிறை கடை நடத்த அனுமதி கேட்டு மனு வழங்கி உள்ளார். மனுவை பரிசீலித்த மாநகராட்சி அதிகாரி காவல்துறையினரிடம் தடையில்லா சான்று பெற்றபின் கடை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை
இதனை தொடர்ந்து காவல் நிலையம் சென்ற பாதுஷா மைதீன் மாட்டிறைச்சி கடை நடத்த தடையில்லா சான்று கேட்டு உள்ளார். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை காரணமாக சொல்லி சேலம் காவல்துறையினர் பாதுஷா மைதீன் மாட்டிறைச்சி கடை நடத்த தடையில்லா சான்று வழங்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பியூஷ் மானுஷ் கைது
இந்த நிலையில் மாட்டிறைச்சி சில்லி கடை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி, பியூஸ் மானுஷ் மற்றும் பாதுஷா மைதீன் தனது குடும்பத்தினருடன் பதாகைகள் ஏந்தி கொண்டு மாநகராட்சி அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றதால்பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் பியூஸ் மனுஷ் மற்றும் பாதுஷா மைதீன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications