மார்ச் மாதமே குடிநீர் இல்லை.. தண்ணீர் குடுங்க... சேலம் மேயர் காரை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு
சேலம் கோரிமேடு பகுதியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மேயரின் காரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்: கோரிமேடு பகுதியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனின் காரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெயில் ஆரம்பித்து சில நாட்களிலேயே பல பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தலை தூக்க ஆரம்பித்து விட்டது. சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளில் குடிநீர் கிடைக்க தனி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மின்தடை, பராமரிப்பு பணிகள் காரணமாக சில நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படும்.

சேலம் கோரிமேடு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்பது பொதுமக்களின் புகாராகும். சேலம் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ராமச்சந்திரன் போட்டியிட்ட வார்டில் இந்த கோரிமேடு பகுதி உள்ளது.
இன்று காலையில் ஏராளமான பொதுமக்கள் காலி குடங்களுடன் தண்ணீர் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்து மேயர் ராமச்சந்திரன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவரின் காரை சிறைபிடித்த பொதுமக்கள், குடிநீர் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக மேயர் ராமச்சந்திரனிடம் கூறினார். வாரத்தில் 2 நாட்களாவது தடையின்றி தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தனர்.
மாநகராட்சி அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மேயர் ராமச்சந்திரன் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண உத்தரவிட்டார். லாரிகள் மூலம் உடனடியாக குடிநீர் சப்ளை செய்யப்படும் என்று மேயர் ராமச்சந்திரன் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேயரின் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திடீர் மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications