சேலத்தில் இன்ஸ்பெக்டர், ராஜலட்சுமி அசிங்கம்.. ஸ்டேஷனில் இப்ப ஆளும் இல்லை.. கார்டுதாரர்களுக்கு ஹேப்பி
சேலம்: குடும்ப அட்டைதாரர்களுக்குரிய ரேஷன் அரிசியை யாரும் கடத்தக்கூடாது, அப்படி கடத்துபவர்கள் யாராவது இருப்பின், பொதுமக்கள் கடத்தல் தொடர்பாக 18005995950 என்ற எண்ணிலும், 9677736557 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர்.. எனினும், எனினும் தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் என்பது முழுமையாக குறையவில்லை.. அதிலும் சில அரசு அதிகாரிகளே இதற்கு உடந்தையாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது.
தமிழகத்தில், 35000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலமாக, 2.20 கோடி ரேஷன் கார்டுகளுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மாநில அரசால், மானிய விலையில் வழங்கப்படுகிறது.

சர்க்கரை அட்டைதாரர்கள்
இதில், அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசிக்கு கேரளாவில் நல்ல விலை கிடைக்கிறது.. அதனால்தான், கேரளா மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களுக்கு கடத்தி செல்வது தொடர்கதையாகிவிட்டது. இப்பொருட்களை கடத்தி சென்று மலிவு விலைக்கு அண்டை மாநிலங்களில் விற்று, அதே அரிசியை பாலிஷ் செய்து, அதிக விலைக்கு திரும்பவும் நம்மிடமே விற்றுவிடுகிறார்கள்.
பெரும்பாலும் இரவு நேரங்களில் வேன்களை வைத்து, அரிசி மில்களுக்கு, ரேஷன் அரிசி கடத்தப்படுவதால் தமிழக எல்லைகளில் காவல்துறையினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சேலத்தில் நடந்துள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது,. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி சக்திவேல்.. இவர் கடந்த மாதம் ரேஷன் அரிசியை கடத்துவதாக ஏற்கனவே போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படியே சக்திவேலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்திருந்தனர். எனினும் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.
ரேஷன் பொருள் கடத்தல்
இந்த நிலையில் விவசாயி சக்திவேல், சேலம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், கடந்த மாதம் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் போலீசார் என்னை கைது செய்தனர். இதன்பிறகு ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்வதை விட்டு விட்டேன்.
ஆனால் இன்ஸ்பெக்டர் ராமராஜன், 2 எஸ்.ஐக்கள் ஆகியோர், மீண்டும் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யுமாறு நெருக்கடி செய்வதுடன், மாதம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். முதற்கட்டமாக ரூ.15000 தருமாறு கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். ஆனால் ஜெயிலுக்கு சென்றுவிட்ட எனக்கு ரேஷன் அரிசி விற்பனை செய்ய எனக்கு விருப்பமில்லை. எனவே என்னை அரிசி கடத்தி விற்பனை செய்ய சொல்ல அவர்களின் ஹமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
ஒரே நேரத்தில் கைது
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமராஜன், எஸ்.ஐ.க்கள் சரவணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசில் புகார் தருவதற்கு முன்னதாக, ரூ.15 ஆயிரத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என்று விவசாயி சக்திவேல் கேட்டுள்ளார். ஏட்டு ராஜலட்சுமியிடம் கொடுக்குமாறு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.. அதன்படி, விவசாயி சக்திவேல் பணத்துடன் சேலம் வந்தார். சீலநாயக்கன்பட்டி பகுதியில் ஏட்டு ராஜலட்சுமியிடம் ரூ.15 ஆயிரத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஏட்டு ராஜலட்சுமியை அதிரடியாக கைது செய்தனர்.
கிட்ட வரும் புரமோஷன்
இந்த கைது நடவடிக்கை நடந்த அதே நேரத்தில், போலீஸ் ஸ்டேஷனில் இருந்த இன்ஸ்பெக்டர் ராமராஜன், எஸ்.ஐ.க்கள் சரவணன், ராமகிருஷ்ணன் ஆகியோரையும் இன்னொரு விஜிலென்ஸ் குழுவினர் கைது செய்தனர். திடீரென சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையில் 4 பேர் கூண்டோடு கைதாகிவிட்டதால், போலீஸ் ஸ்டேசனுக்கு அதிகாரிகள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது..
இதில் கைதான இன்ஸ்பெக்டர் ராமராஜன் திருச்சியை சேர்ந்தவர். எஸ்.ஐ சரவணனுக்கு சொந்த ஊர் திண்டுக்கல். எஸ்.ஐ. ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் போஸ்டிங் லிஸ்ட்டிலும் உள்ளாராம்.. அதற்குள் இப்போது அசிங்கப்பட்டு அதிகாரி கைதாகி உள்ளார்,
'கடத்தலில் ஈடுபடும் நபர்களை போலீசார் இப்படி தயவு தாட்சண்யமின்றி கைது செய்து வருவது ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications