சேலத்தில் வாரிசு வேலை கேட்டு வந்த இளம்பெண்.. அதே "குரலுடன்" அசிங்கப்பட்ட அரசு அதிகாரி.. ஓ மை காட்
சேலம்: தன்னுடைய தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றி இறந்துவிட்டதால், கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்குமாறு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார் இளம்பெண்.. அவருக்கு என்னாச்சு தெரியுமா?
சேலம் மாவட்டத்தில் 2 நாளைக்கு முன்புதான், பாலியல் புகாரில் தலைமை ஆசிரியர் ஒருவர் கைதாகியிருந்தது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இங்கு செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக, ஏற்காடு அடிவாரததை சேர்ந்த 60 வயது சுப்பிரமணியன், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.. கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் இந்த பள்ளிக்கு டிரான்ஸ்பர் ஆகிவந்தாராம் சுப்பிரமணியன்.
தலைமை ஆசிரியர்: நாளுக்கு நாள் சுப்பிரமணியனின் பாலியல் சேட்டைகள் அதிகமாகவும், தங்களது பெற்றோர்களிடம் சொல்லி மாணவிகள் அழுதிருக்கிறார்கள்.. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினரிடம் புகார் தெரிவித்ததுடன, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும், மாவட்ட சைல்டு லைன் அமைப்பிற்கும் புகார் மனுவை அனுப்பினர்.
அதற்கு பிறகே மொத்த அதிகாரிகளும் பள்ளிக்கு சென்று, விசாரணை நடத்தினார்கள். இப்போது சுப்பிரமணியன் கைதாகி உள்ளார்.. இவர்மீது ஏற்கனவே பல்வேறு பாலியல் புகார்கள் இருக்கிறதாம்.. இதனால் ஏற்கனவே ஒன்றரை வருடங்கள் சஸ்பெண்டும் செய்யப்பட்டிருக்கிறார். சஸ்பென்டிலிருந்து மீண்டு, இந்த பள்ளிக்கு 4 மாதம் முன்புதான் வந்திருக்கிறார். மறுபடியும் வேலையை காட்டவும், தற்போது கைது கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு அதிகாரி: இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் இன்னொரு அரசு அதிகாரி பாலியல் புகாரில் சிக்கி உள்ளார்.. சேலம் மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 25 வயதாகிறது.. இவரது அப்பா தூய்மை பணியாளராக பணியாற்றி இறந்துவிட்டதால், கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை வழங்குமாறு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.. இதற்காக மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேவராஜனையும் சந்தித்து பேசியிருக்கிறார் இளம்பெண்.
ஆனால் தேவராஜன் அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு, பாலியல் தொல்லை தர துவங்கியதுடன், தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தனது செல்போனில், தேவராஜன் பேசியதை அப்படியே ரிக்கார்டு செய்து விட்டார்.. இதனையே ஆதாரமாக வைத்து, சேலம் டவுன் மகளிர் போலீஸிலும் தந்துவிட்டார்.
வலுவான ஆதாரம்: இளம்பெண் ஆதாரத்துடன் தந்த புகாரின்பேரில் போலீசார், கண்காணிப்பாளர் தேவராஜனிடம் விசாரணை மேற்கொண்டனர்.. அதில், அந்த பெண்ணிடம் தவறாக பேசி பாலியல் தொல்லை தந்தது உறுதி செய்யப்பட்டது.. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பாளர் தேவராஜனை கைது செய்து, சேலம் ஜெயிலிலும் அடைத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications