சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்.. சேலம் பெற்றோரின் ஷாக் முடிவு! மருத்துவமனையிலேயே விட்டுச்சென்ற சோகம்

Google Oneindia Tamil News

சேலம்: ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளை தங்களால் வளர்க்க முடியாது என்று கூறி மருத்துவமனையிலேயே பெற்றோர் விட்டுச்சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் சேலம் அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கடந்த 20 ஆம் தேதி ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன.

பெற்றோர் முடிவு

பெற்றோர் முடிவு

எடை குறைவாக பிறந்த இந்த மூன்று பெண் குழந்தைகளையும் வறுமையின் காரணமாக பராமரிக்க முடியாத நிலையில் தாங்களின் நிலை இருப்பதாக குழந்தைகளின் பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் வள்ளியிடம் தெரிவித்து, மருத்துவமனையிலேயே வைத்துக்கொள்ளுமாறு கூறி இருக்கிறார்கள்.

மருத்துவர் முதல்வர் அறிவுரை

மருத்துவர் முதல்வர் அறிவுரை

உடனே குழந்தைகளை பெற மறுத்த மருத்துவமனை முதல்வர் வள்ளி, பெற்றோரிடம் மருத்துவமனை முதல்வர் குழந்தைகளின் அருமை குறித்து தன்னால் முடிந்த அளவுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். இருப்பினும் தங்களால் 3 குழந்தைகளையும் வளர்க்க முடியாது என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

எடை குறைவு

எடை குறைவு

தங்கள் குடும்ப சூழ்நிலையை அவரிடம் மீண்டும் பெற்றோர்கள் தெரிவிக்கவே, மருத்துவமனை நிர்வாகமும் குழந்தைகளை விட்டுச்செல்ல சம்மதித்தது. இதனை அடுத்து குழந்தையை அவர்கள் அங்கேயே விட்டுச் சென்றனர். இதனால் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக எடை குறைந்து பிறந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

 குழந்தை பாதுகாப்பு அலுவலர்

குழந்தை பாதுகாப்பு அலுவலர்

இந்த நிலையில் 3 பெண் குழந்தைகளும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சென்று குழந்தைகளை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரியிடம் 3 குழந்தைகளும் வழங்கப்பட்டன.

கேரளா தந்தை

கேரளா தந்தை

மேலும் சிறந்த முறையில் குழந்தைகளை பராமரிக்கவும் அவர் அறிவுறுத்தினார். கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த ஏழை தந்தை ஒருவர் தன்னுடைய குழந்தைகள் உணவின்றி பசியில் தவித்ததாக கூறி காவல் நிலையத்தில் தஞ்சமடையவே, அவருடைய குழந்தைகளுக்கு போலீசார் உணவு வாங்கிக்கொடுத்தனர்.

வறுமை

வறுமை

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் சென்றவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு பல வேலைவாய்ப்பை இழந்து கடன் நெருக்கடி, வருவாய் இன்மை, பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

English summary
It has come as a shock that the parents left the 3 girls born in one birth at the hospital saying that they could not raise them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X