சேலத்தில் ரூ.500 கோடியை அள்ளிய 2 பெண்கள்.. வேலூர் விஜயா பேங்க்கில் மட்டும் 2 கோடி.. ஆடிப்போன போலீஸ்
சேலம்: சேலத்தில் ரூ.500 கோடி மோசடி தொடர்பாக கைதாகியுள்ள 4 பேரிடமும், விசாரணை துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.. இவர்கள் 4 பேரும் மோசடி செய்த பணத்தை வங்கிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முக்கியமாக அறக்கட்டளை விஜயாபானு, ஜெயபிரதாவுக்கு எந்தெந்த வங்கிகளில் கணக்குகள் இருக்கிறது என போலீசார் ஆய்வு செய்யப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
வேலூரை சேர்ந்த விஜயாபானு, ஜெயபிரதா உள்ளிட்ட சிலர், சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் நடத்தி வந்தனர்.. இதன்மூலலம் மலிவு விலையில் உணவு, இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, பல்வேறு தொழில்கள் குறித்த பயிற்சி தந்து வந்திருக்கிறார்கள்.

தங்களிடம் பயிற்சிக்கு வந்தவர்களிடம், அறக்கட்டளையில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவோம், இரட்டிப்பு தொகை தருவோம் என்று ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்கள். இதை நம்பி , பலரும் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.. முதலீடு செய்தவர்களை நம்பவைப்பதற்காக ஆரம்பத்தில் சிறிது பணமும் தரப்பட்டது.
இதனால் நம்பகத்தன்மை அதிகரித்த நிலையில், மேலும் ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர்.. இதனால், இவர்களது பயிற்சி நிறுவனத்தில் எந்நேரமும் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
அதிரடி சோதனை: இதையடுத்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியபோது, ரூ.12 கோடியே 65 லட்சம், இரண்டரை கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அத்துடன், நிர்வாகி ஜெயபிரதா, பாஸ்கர், சையத் மஹ்மூத் உள்பட 4 பேரையும் கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர். அத்துடன். கைது செய்யப்பட்டு, சேலம் பொருளதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையும் மேற்கொண்ட வருகிறார்கள்.
இதற்குநடுவில், இந்த அறக்கட்டளையை ரூ.500 கோடி வரை மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து, சேலம் மாவட்டத்தையே அதிர வைத்தது.. பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் இதுவரை 119 பேர், புகார் தந்துள்ளதாகவும், இவர்களில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும், அறக்கட்டளையில் முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
6 கணக்குகள் : விஜயாபானு, ஜெயபிரதாவின் 6 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. விஜயாபானுவின் கார் டிரைவரான சையத் முகமதுவின் வங்கி கணக்கில் ரூ.84 லட்சம் இருந்ததால், அவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டன.
தற்போது இதுபற்றி விசாரித்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அந்த மண்டபத்தில் சோதனையிட்டு ரூ.12.68 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர். அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயாபானு, ஜெயபிரதா, பாஸ்கர், சையத் மஹ்மூத் ஆகிய 4 பேரை கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர்.
ஆந்திரா பிரமுகர்கள்: இதில் விஜயாபானு, வேலூர், சென்னை, காஞ்சிபுரம், ஆந்திராவில் பல்வேறு வகையில் பண மோசடியில் ஈடுபட்டதும், போலி ஐபிஎஸ் அதிகாரியாக செயல்பட்டு சிலரை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. அதனால், அவர் இதுவரை எங்கெல்லாம் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், கைதாகியுள்ள 4 பேரும் மோசடி செய்த பணத்தை வங்கிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, அறக்கட்டளை விஜயாபானு, ஜெயபிரதாவுக்கு எந்தெந்த வங்கிகளில் கணக்குகள் இருக்கிறது என போலீசார் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.. இதில், சேலத்தில் உள்ள 2 தனியார் வங்கிகளில் இருவரது பெயரிலும் 7 சேமிப்பு கணக்குகள் இருந்ததை கண்டறிந்தனர். அவற்றில் விஜயாபானு பெயரில் ரூ.1.10 கோடியும், ஜெயபிரதா பெயரில் ரூ.90 லட்சமும் பணம் இருந்தது.
பணம் முடக்கம்: இதையடுத்து, அந்த 2 தனியார் வங்கிகளுக்கும் கடிதம் வழங்கி, அந்த 7 கணக்குகளில் இருந்த ரூ.2 கோடி பணத்தையும் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியிருக்கிறார்களாம்.. தொடர்ந்து கைதானவர்களிடம் விசாரணை நடக்கிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications