நான் பூவெடுத்து வெக்கணும்.. முரளி பாட.. ஆசை அதிகம் வச்சு.. பெண் டான்ஸ் போட.. ரெண்டும் ஓடிபோய்ருச்சு!
Recommended Video
சேலம்: டிக்டாக் கூத்து இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறதோ தெரியவில்லை.. எத்தனை குடும்பம் தெருவுக்கு வர போகிறதோ, அதுவும் தெரியவில்லை.. டூயட் பாடலுக்கு ஜோடியாக வீடியோ பதிவிட்ட பெண்ணுக்காக இளைஞர் ஒருவர், தாலி கட்டிய மனைவியை நடுத்தெருவில் தவிக்க விட்டுவிட்டு போய்விட்டார். இதுதான் அடுத்த டிக்டாக் அலப்பறை!
"நான் பூவ எடுத்து வெக்கணும் பின்னாலே" என்று இளைஞர் பாட.. முகபாவனையில் பின்னி எடுக்கிறார் டிக்டாக் பெண் ஒருவர்.. பிறகு "ஒரு தேக்குல செஞ்சதுபோல, உன் தேகம் அம்மாடி" என்று ஆட ஆரம்பிக்கிறார்.
திடீரென "ஆசை அதிகம் வச்சு மனசை அடக்கி வெக்கலாமா" என்று புடவையை தூக்கி செருகி கொண்டு டான்ஸ் ஆடுகிறார் அந்த பெண். இதுபோல பல பல வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளுபவர்!

டிரைவர்
இந்த பெண்ணைதான் ஒரு இளைஞர் தொடர்ந்து டிக்டாகில் ஃபாலோ செய்து வந்துள்ளார்.. சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர்.. பெயர் முரளிதரன்... டிரைவராக உள்ளார்... டிக்டாகில் அதிக விருப்பம் போல தெரிகிறது.. அதனால் நிறைய வீடியோ செய்து பதிவிட்டுள்ளார். அப்போதுதான், திருச்சியை சேர்ந்த மற்றொரு டிக்டாக் பெண்ணின் வீடியோ இவரை கவர்ந்துள்ளது.

டூயட்
சாதாரண எளிமையான கிராமத்து பெண் தோற்றத்தில் அவர் உள்ளார்.. ஆனால், முகபாவனை, டான்ஸ் என எல்லாவற்றிலும் கலக்குகிறார். கடைசியில் முரளியுடன் அந்த பெண் டூயர் பாடி வீடியோ போட ஆரம்பித்தார். நாளடைவில் இந்த ஜோடி செல்போன் நம்பர்களை வாங்கி கொண்டு திருட்டு தனமாக பேச ஆரம்பித்தனர்.. பிறகு பைக்கில் வெளியே ஜாலியா ஊர் சுற்றினர்.

திருமணம்
பைக்கை முரளி ஓட்ட, பின்னாடி இந்த பெண் உட்கார்ந்து கொண்டு... இருவரும் அப்போதும் டிக்டாக் வீடியோ எடுத்துள்ளனர்... ஏற்கனவே முரளிதரன் திருமணம் ஆகி டைவர்ஸ் ஆனவராம்.. அதனால் அவருக்கு கணவரை இழந்த ஒரு பெண்ணை வீட்டில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.. 2-வது மனைவியையும் ஏமாற்றி விட்டுதான், இந்த டிக்டாக் பெண்ணுடன் முரளி ஊர் சுற்றி வந்துள்ளார்.

புகார்
ஒரு கட்டத்தில் தனியாக ஒரு வீடு எடுத்து அந்த டிக்டாக் பெண்ணுடன் வாழவும் துவங்கி விட்டாராம் முரளி.. இதனால், "என் வாழ்க்கையே இந்த டிக்டாக்கால் நாசமா போச்சு.. டிக்டாக் வீடியோவை தடை பண்ணுங்க" என்று அந்த அபலை பெண் புகாரும் தந்துள்ளாராம்! நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தி வரும் இந்த டிக்டாக் அவலத்துக்கு என்றுதான் தீர்வோ!!
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications