சேலத்தில் 6 சென்ட் நிலம்.. பட்டா பெயர் மாற்றம் செய்ய விஏஓ போட்ட கண்டிசன்.. கைதில் முடிந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே செக்கடிப்பட்டி கிராமத்தில் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவருடைய உதவியாளரும் கையும் களவுமாக போலீசாரிடம் சிக்கினார். இருவரையும் அழைத்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே செக்கடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயதாகும் ராமமூர்த்தி என்பவர், அந்த பகுதியில் இறைச்சி மற்றும் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவரது தந்தை பெயரில் 6 சென்ட் நிலம் இருக்கிறது. அந்த நிலத்திற்கான பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் ராமமூர்த்தி விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுக்க விரும்பாத ராமமூர்த்தி இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

Salem VAO arrested for accepting a 4 000 bribe to process a land patta transfer

இதையடுத்து போலீசார், ரசாயன பவுடர் தடவிய 4 ஆயிரம் ரூபாயை நோட்டுக்களை ராமமூர்த்தியிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் தருமாறு தெரவித்தனர். அதன்படி, அவர் செக்கடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று தற்காலிக கிராம உதவியாளர் மாதவன் மூலம் கிராம நிர்வாக அலுவலர் சரவணனிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுயில் புதி​தாகக் கட்​டிய வீட்​டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்​சம் பெற்​ற​தாக உதவி மின் பொறி​யாளர், ஃபோர்​மேன் ஆகியோரை லஞ்ச ஒழப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், சிங்​கப்​பெரு​மாள் கோவில் அடுத்த பாரேரி பகு​தி​யைச் சேர்ந்​த 60 வயதாகும் சம்​பத் என்பவர் வசித்து வருகிறார். டிரைவ​ரான சம்​பத் தனது வீட்​டுக்​குப் புதிய மின் இணைப்பு பெறு​வதற்​காக சிங்​கப்​பெரு​மாள் கோவில் மின்​வாரிய அலு​வல​கத்​தில் விண்​ணப்​பித்​திருந்​தார். விண்​ணப்​பித்து 3 மாதங்​களாகி​யும் மின் இணைப்பு வழங்​கப்​பட​வில்​லை. மின் இணைப்​புக்​காக உதவி மின் பொறி​யாளர் ஜெய​ராணியை சம்​பத் அணுகிய​போது அவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இதுகுறித்து செங்​கல்​பட்டு லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸாரிடம் சம்​பத் புகார் கொடுத்தார்.

இதையடுத்​து, போலீ​ஸாரின் அறி​வுறுத்​தலின்​படி ரசாயனப் பொடி தடவப்​பட்ட ரூ.20 ஆயிரம் பணத்​துடன் சம்​பத் மின்​வாரிய அலு​வல​கத்​துக்​குச் சென்​றார். அங்கு அவரிட​மிருந்து ஃபோர்​மேன் சரவணன் (50)பணத்​தைப் பெற்று உதவி மின் பொறி​யாளர் ஜெய​ராணி​யிடம் கொடுத்​ததாக கூறப்படுகிறது. அங்கு மறைந்​திருந்த செங்​கல்​பட்டு லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார், இரு​வரை​யும் கையும களவுமாக பிடித்து கைது செய்தனர். கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+