'அண்ணாமலை'..! பிரதான எதிர்கட்சியாக பாஜக தான் செயல்படுகிறது..! துண்டை போட்டு வைக்கும் சமக சரத்குமார்!
சேலம் : பாஜக தலைவர் அண்ணாமலை தான் பிரதான எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எனவும், அவரது கருத்துக்கு பதில் சொல்ல வேண்டியது ஆளுங்கட்சியின் கடமை என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும் நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்," தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பது பெரிய அளவில் ஏதுமில்லை என்றும் பெரியளவிலான குற்றச்சாட்டை கூற முடியாது என்றும் தெரிவித்தார்.

நடிகர் சரத்குமார்
மேலும், "பாரதிய ஜனதா கட்சி மதத்தை வைத்து அரசியல் நடத்துவதாக கூறப்படுகிறது மற்ற மதத்தவரை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பாஜகவினர் மீது கட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விஷயம் உலக அளவில் பேசப்பட்டது. ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும் இனிவரும் காலங்களில் அனைவரும் சமம் சமத்துவம் என்ற சூழ்நிலையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும்

பாஜக அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு அவர் பிரதான எதிர்க்கட்சியாகத்தான் செயல்பட்டு வருவதாகவும் அவரது கருத்துக்கு பதில் சொல்ல வேண்டியது ஆளுங்கட்சியினர் கடமை. எதிர்க் கட்சியில் இருப்பவர்கள் கருத்துக்களை முன்வைக்காத நிலையில் பாஜக முன்வைப்பது தவறில்லை

சமத்துவ மக்கள் கட்சி
சமத்துவ மக்கள் கட்சியை பொருத்தவரையில் தொய்வடையவில்லை என்றும் தேர்தலில் போட்டியிடுவதால் தங்கள் கையில் இருக்கும் பணத்தையும் இழக்க நேரிடும் என்பதால் கட்சி நிர்வாகிகள் தயங்குவதாகவும் ஆகவும் இருப்பினும் மக்கள் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மக்கள் பணி
ஜனநாயக அரசியல் தற்போதைய சூழ்நிலை இல்லாமல் உள்ளது கோடி கோடியாக தேர்தலில் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் சராசரி குடிமகன் அரசியலுக்கு வர முடியாது. நேரடி தேர்தல் அரசியலில் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்வதில் சமக முன்னணியில் உள்ளது என அவர் கூறினார்.
-
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications