சேலம் 8 வழிச்சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.. நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு!
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் கண்டிப்பாக திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என்று பாஜக அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.
Recommended Video

சேலம்: சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் கண்டிப்பாக திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என்று பாஜக அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.
கடந்த வாரம் சேலம் 8 வழி சாலை வழக்கில் தீர்ப்பு வந்தது. பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையில் வந்த இந்த தீர்ப்பில், சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது, அதனால் திட்டத்திற்கு தடை விதிக்கிறோம் என்று சென்னை ஹைகோர்ட் கூறி உள்ளது.
இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து பாஜகவின் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். சேலத்தில் பிரச்சாரம் செய்த அவர் இந்த திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.

நமக்குத்தான் வெற்றி
நிதின் கட்கரி தனது பிரச்சாரத்தில் தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணிக்கு பெரிய அளவில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது .இங்கிருக்கும் கூட்டத்தை பார்க்கும் போதே அது தெரிகிறது. மக்கள் நம்முடைய கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவு அளிக்கிறார்கள்.

ஜெண்டில்மேன் ஒப்பந்தம்.
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வையுங்கள். தமிழகத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். முக்கியமாக உங்களது தண்ணீர் பிரச்னையை நான் தீர்த்து வைக்கிறேன். இது நம்மிடையேயான ஜெண்டில்மேன் ஒப்பந்தம்.

சேலம் 8 வழி சாலை
சேலம் 8 வழி சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும், மக்களிடம் திட்டம் குறித்து பேசுவோம். மக்களிடம் பேசி திட்டத்தை கண்டிப்பாக செயல்படுத்துவோம். விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு கண்டிப்பாக வழங்கப்படும்.

வளர்ச்சி முக்கியம்
8 வழிச்சாலை திட்டம் என்பது வளர்ச்சிக்கு மிக முக்கியமானதொரு திட்டம். கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மிக அதிக தொகை தரப்படும் என்பதை நான் கூறிகொள்கிறேன். விவசாயிகளுடன் பேசி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும்., என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.
-
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
50+ பெண்களுக்கு பாலியல் கொடுமை! சேலம் மணிகண்டனை லேசில் விடக் கூடாது! மோகன் ஜி ஆதங்கம் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications