புடவையை சும்மா ஏத்தி செருகி.. அக்கா ஒரே டான்ஸ்தான்.. அதுவும் எடப்பாடி போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே..!
எடப்பாடி போலீஸ் ஸ்டேஷன் வாசலில் டான்ஸ் ஆடிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது
சேலம்: போலீஸ் ஸ்டேஷன் வாசலில் டான்ஸ் ஆடி, குத்தாட்டம் போட்டு, பெரிய ரகளையில் ஈடுபட்டுள்ளார் ஒரு பெண்.. எடப்பாடியில் இப்படி தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
எடப்பாடி போலீஸ் ஸ்டேஷன் ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ளது... இங்கு ஒரு இளம் பெண் புகார் தருவதற்காக வந்திருந்தார்.. 35 வயதிருக்கும்.
ஆனால், அந்த ஸ்டேஷனில் இவரை போலவே புகார் தருவதற்காக மேலும் சிலர் வந்திருந்தனர்.. அதனால் கொஞ்ச நேரம் ஒரு ஓரமாக அமைதியாக நின்றிருந்தார்..

எடப்பாடி
அங்கிருந்த போலீசாரும், வந்தவர்களிடம் புகார்களை பெற்று கொண்டு அது சம்பந்தமாக விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். ஆனால், இந்த பெண்ணிடம் மட்டும் எந்த கேள்வியும் கேட்கவில்லை.. புகாரும் வாங்கவில்லை.. விசாரணையும் செய்யாமல் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.. கால்கடுக்க காத்து நின்று, இந்த பெண் பொறுமையிழந்து, வெறுப்பின் உச்சத்துக்கே போய்விட்டார்..

பொதுமக்கள்
பிறகு திடீரென ஸ்டேஷன் வாசலுக்கு வந்து நின்று டான்ஸ் ஆட ஆரம்பித்தார்.. இதை அங்கிருந்தோர் யாருமே கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.. போலீஸ்காரர்கள் உட்பட, புகார் அளிக்க வந்த பொதுமக்களும் ஷாக் ஆனார்கள். எனினும், ஒருசிலர் மட்டும் அந்த பெண்ணிடம் வந்து, இது போலீஸ் ஸ்டேஷன்.. இப்படியெல்லாம் இங்கு டான்ஸ் ஆட கூடாது என்று அறிவுறுத்தினர்..

குத்தாட்டம்
அதற்கு "உனக்கு இந்த டான்ஸ் பிடிச்சிருந்தா ஒரு ஓரமா நின்னு பாரு.. பிடிக்கலைன்னா, போய்ட்டே இரு.. அட்வைஸ் எல்லாம் பண்ணாதே" என்று சொல்லிவிட்டு மறுபடியும் ஆடிக் கொண்டே இருந்தார்.. இப்படியே கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கும் மேல், பலவிதமான சினிமா பாட்டுக்களை அவரே பாடிக் கொண்டு குத்தாட்டம் போட்டார். ஒருகட்டத்தில் டான்ஸ் ஆடி டயர்ட் ஆகிவிட்ட அந்த பெண் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்..

யார் இவர்?
ஆனால், 2 மணி நேரமாக டான்ஸ் ஆடியும் அந்த பெண்ணை போலீசார் எந்த கேள்வியும் கேட்கவில்லை.. ஸ்டேஷன் வாசலில் குத்தாட்டம் போட்டதை தடுக்கவும் இல்லை.. இதை பற்றி கேட்டதற்கு, அந்தப் பெண் எடப்பாடி நகராட்சி உட்பட்ட கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவராம்.. அடிக்கடி ஏதாவது பிரச்சனை என்று சொல்லி, புகார் எடுத்துட்டு ஸ்டேஷனுக்கு வருவாராம்.. ஆனால் அதெல்லாமே பொய் புகார்கள்தானாம்.. அந்த பொய்புகார்களை போலீஸார் ஏற்பதுமில்லையாம்.. அந்த கடுப்பில்தான் இப்படி டான்ஸ் ஆடிவிட்டு போவாராம்..












Click it and Unblock the Notifications