சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சீனாவின் ஆதிக்கம் ரொம்ப டேஞ்சர்.. அதை தடுக்க இந்தியா தான் சரியான ஆள்!" அமெரிக்க அமைச்சர் பளீச்

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Recommended Video

    China-வின் ஆதிக்கத்தை தடுக்க India தான் சரியான ஆள் - America *World

    ஏற்கனவே முட்டல் மோதல்களுடன் இருந்த இந்தியா - சீனா உறவு கல்வான் மோதலுக்குப் பின்னர் மேலும் மோசமடைந்தது. இரு தரப்பு நாடுகளும் எல்லையில் தொடர்ச்சியாக ராணுவத்தைக் குவித்து வருகிறது.

    மேலும், எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியாக உள்கட்டமைப்புகளிலும் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எல்லையில் பதற்றமான ஒரு சூழல் உருவாகி உள்ளது.

    தைவான் மீது போர்.. அமெரிக்காவிற்கு சீனா நேரடி எச்சரிக்கை.. சர்வதேச அரசியலில் பரபரப்புதைவான் மீது போர்.. அமெரிக்காவிற்கு சீனா நேரடி எச்சரிக்கை.. சர்வதேச அரசியலில் பரபரப்பு

     இந்தியா-சீனா

    இந்தியா-சீனா

    இந்நிலையில், இந்தியா- சீனா எல்லை விகாரம் குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஜேம்ஸ் ஆஸ்டின் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் நாட்டில் நடைபெறும் Shangri-La Dialogue என்ற நிகழ்ச்சியில் பேசிய லாயிட் ஜேம்ஸ், இந்தியாவுடனான எல்லையில் சீனா தனது நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடினமாக்குகிறது. என்று தெரிவித்தார். மேலும், சீனா போர் நிர்ப்பந்தம் மற்றும் ஆக்கிரமிப்பு அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதால், அமெரிக்கா தனது நண்பர்களின் உரிமைகளை நிலைநிறுத்த சில கடினமான நடவடிக்கைகளை எடுக்கிறது என்றார்.

     கடினமாக்குகிறது

    கடினமாக்குகிறது

    சிங்கப்பூரில் லாயிட் ஜேம்ஸ் ஆஸ்டின் மேலும் பேசுகையில், "தென் சீனக் கடலில் சீனா உரிமை கோரும் பிரதேசங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத அணுகுமுறைகளைச் சீனா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் சட்டவிரோத திட்டங்களைச் சீனா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதேபோல மேற்குப் புறம் பார்த்தால் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் எல்லைகளில் சீனா தொடர்ந்து தனது நிலைப்பாட்டை கடினமாக்கி வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

     எல்லை விவகாரம்

    எல்லை விவகாரம்

    மே 5, 2020 முதல் பாங்காங் ஏரி பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. அப்போது குவிக்கப்படத் தொடங்கிய ராணுவம் இன்னும் கூட தொடர்கிறது. இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் பெரியளவில் முன்னேற்றம் இல்லை. இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் சீனா தொடர்ந்து பாலங்கள், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளைக் கட்டி வருகிறது. இந்தியா உடன் மட்டுமின்றி எல்லா புறமும் சீனா மோதல் போக்கையே கொண்டு உள்ளது. வியட்நாம் மற்றும் ஜப்பான் போன்ற இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகள் உடனும் கூட சீனாவுக்குக் கடல் எல்லை மோதல் உள்ளது.

     நட்பு நாடுகள்

    நட்பு நாடுகள்

    அமெரிக்கா தனது நட்பு நாடுகளைப் பாதுகாக்கும் பரஸ்பர பாதுகாப்பு கடமைகளில் இருந்து எப்போதும் பின்வாங்காது என்றும் ஜேம்ஸ் ஆஸ்டின் உறுதி அளித்தார். லடாக் எல்லையில் சீனா உருவாக்கும் சில பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் "ஆபத்தானவை" என்று அமெரிக்க உயர் ஜெனரல் ஒருவர் கூறிய சில நாட்களில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும் இப்படிக் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

     கூட்டு பயிற்சி

    கூட்டு பயிற்சி

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படையுடன் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவம் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தி இருந்தது. இதுபோன்ற ராணுவ பயிற்சிகள் முக்கியமானது என்றும் ஆஸ்டின் கூறினார். மேலும், தெற்கு ஆசியப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட குவாட் நாடுகள் உடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகவும் லாயிட் ஜேம்ஸ் தெரிவித்தார்.

     ஆக்கிரமிப்பு

    ஆக்கிரமிப்பு

    அதேபோல எதிர்காலத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்க அமெரிக்கா வெளிப்படையாகத் தயாராக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், "சீன ஆக்கிரமிப்பு அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதால், எங்கள் நட்பு நாடுகளின் உரிமைகளை நிலைநிறுத்த நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம். இந்தியாவின் வளர்ந்து வரும் ராணுவத் திறன் மற்றும் தொழில்நுட்ப வலிமை ஆகியவை அந்க பிராந்தியத்தில் ஒரு ஸ்திரப்படுத்தும் சக்தியாக இருக்கும்.

    English summary
    China is continuing to harden its position along the Line of Actual Control with India: (இந்தியா சீன பாதுகாப்பு குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர்) US Defence Secretary Lloyd James Austin latest press meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X