AI-ஐ ஏற்றுக்கொள்வதில்.. இந்தியாவும், சிங்கப்பூரும் ஒன்றுதான்! ஆய்வில் வெளியான முக்கியமான விஷயம்
சிங்கப்பூர்: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் ஐரோப்பிய நாடுகளை விட இந்தியாவும், சிங்கப்பூரும் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய சந்தைகளில் உள்ள நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவை பணமாக்குவதில் தங்கள் மேற்கத்திய போட்டி நிறுவனங்களை விட வேகமாகச் செயல்படுகின்றன. செலவு குறைப்பிலிருந்து, வருவாய் ஈட்டுதல் நோக்கிய உலகளாவிய மாற்றத்தில் இந்தியாவும், சிங்கப்பூரும் முன்னிலை வகிக்கின்றன என்று தெரிய வந்திருக்கிறது. தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவான தட்வொர்க்ஸ் ஆய்வின்படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

AI வளர்ச்சி
உலகளவில் 3,500 தகவல் தொழில்நுட்ப முடிவெடுப்பவர்கள் மற்றும் C-நிலை தலைவர்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 77% வணிகத் தலைவர்கள் தங்கள் AI உத்திகளை செலவு சேமிப்பிலிருந்து, வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மாற்றியுள்ளனர். அதாவது முன்னர் AI பயன்படுத்தி செலவை குறைத்தார்கள். ஆனால், தற்போது AI-ஐ பயன்படுத்தி எப்படி காசு பார்ப்பது என்பதை நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன.
வருவாய் அதிகரிப்பு
எனினும், இந்த மாற்றத்தின் வேகம் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் மாறுபட்டாலும், ஆசிய நாடுகள் AI மீதான அதிகபட்ச நம்பிக்கை மற்றும் பயன்பாட்டுடன் முதலிடத்தில் உள்ளன.
வளர்ச்சி சார்ந்த AI உத்திகளை தீவிரமாகப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. பிரேசில் நாட்டுடன் இணைந்து, இது ஆய்வில் மிகவும் நம்பிக்கையான சந்தையாகக் கருதப்படுகிறது. இங்கு 49.2% நிர்வாகிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் AI மூலம் 15%க்கும் அதிகமான வருவாய் அதிகரிப்பை எதிர்பார்க்கிறார்கள்.
AI பயன்பாடு அதிகரிப்பு
உலகத் தலைவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், வரும் பத்தாண்டிற்குள் AI 15%க்கும் அதிகமான வருவாய் உயர்வை அளிக்கும் என எதிர்பார்க்கின்றனர். இந்த வருவயை தவறவிட்டுவிடுவோமோ? என்ற அச்சம் வணிகத் தலைவர்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. எனவே AI-ஐ பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
ஏஜென்டிக் AI
குறிப்பாக இந்தியாவும், சிங்கப்பூரும் சுயமாக முடிவெடுக்கும் ஏஜென்டிக் AI தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தில், 48.6% இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. சிங்கப்பூரை பொறுத்தவரை 40.8% நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக சிங்கப்பூர் வணிகர்களிடம் AI FOMO பயம் அதிகமாக இருக்கிறது. அதாவது AI பலரின் வேலையை காலி செய்வதற்கு பயன்படுத்துவதற்கு பதில், மனிதர்களை AI பயன்படுத்த கற்றுக்கொடுத்து அதன் மூலம் பணம் பார்க்கும் முறை அதிகரித்திருக்கிறது. இதனால் வரும் வருமானத்தை தவற விட்டுவிடுவோமோ என்கிற பயத்தைதான் AI FOMO என்பார்.
எனவே சிங்கப்பூர் வணிக நிறுவனங்கள் அவசர, அவசரமாக AI பயன்பாட்டை அதிகரிக்க தொடங்கியுள்ளன. இது ஒரு நல்ல மாற்றம்தான் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
-
டிஆர்பி ராஜா எச்சரிக்கை: கிளாட் ஃபேபிள் 5 பிரச்சனை.. தமிழ்நாடு முன்கூட்டியே தயாரானது! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
Claude Fable 5: வங்கிகளை மொத்தமாக முடக்கும் திறன் கொண்ட AI..? அமெரிக்க அரசு உத்தரவால் ஆந்த்ரோபிக் ஷாக்! -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்











Click it and Unblock the Notifications