சிவகங்கையில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடியவரை சிக்க வைக்க மாஸ்டர் பிளான்.. சிக்கி கொண்ட போலீஸ்?

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மதுக்கடைக்கு எதிராக போராடும் இளைஞரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க நடந்திருப்பாக கூறப்படுகிறது, இதற்கு போலீசாரும் உடந்தையாக இருப்பதாக சி.சி.டி.வி. காட்சிகளுடன் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. என்ன நடந்தது? பெட்டிக்கடை நடத்தும் ராஜ்குமாருக்கு எதிராக யார் யார் இருந்தார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

இன்றைக்கு மதுக்கடைகளுக்கு எதிராக போராடினாலோ, மதுக்கடைகளில் நடக்கும் ஊழல்களை தட்டிக்கேட்டாலோ அது உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும் அபாயம் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இதில் காவலர்கள் சிலரே உதவி செய்யததாக கூறப்படுவது தான் மக்களின் கோபத்திற்கு உச்சகட்ட காரணம் ஆகும்.

A master plan to frame a man who protested against a TASMAC bar in Sivagangai twist by police

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோளப்பட்டிடியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையுடன் இணைந்து தனியார் பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அதனை அகற்ற கோரியும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அண்மையில் கூட சாலை மறியல் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ராஜ்குமார் தலைமையில் கிராம மக்கள் போராடி வந்தார்கள். டாஸ்மாக் கடைக்கு எதிராக ராஜ்குமார் தான் போராட்டங்களை ஒருங்கிணைத்து வந்தாராம். ராஜ்குமார் தனது வீட்டின் அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று அவரது கடைக்கு மது பாரில் வேலை செய்யும் நபர் ஒருவர் வந்தாராம். பின்னர் அவர், ராஜ்குமாரை பழிவாங்கும் நோக்கில் அவரது கடையின் அருகில் போதைப்பொருள் பொட்டலத்தை மறைத்து வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

அவர் சென்ற சில நிமிடங்களிலேயே அங்கு சாதாரண உடையில் வந்த 2 பேர், தங்களை மதுவிலக்கு போலீசார் எனக்கூறியுள்ளனர். பின்னர் ராஜ்குமாரின் கடையில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சோதனை செய்ய வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். அப்போது ஏற்கனவே வைக்கப்பட்ட இடத்தில் இருந்து போதைப்பொருள் பொட்டலத்தை அவர்கள் எடுத்து காண்பித்தனர். பின்னர் கடையில் வைத்து போதைப்பொருள் விற்றதாக ராஜ்குமார் மீது வழக்கு போட முயன்றார்களாம்

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் தனது கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் ஒரு நபர் வந்து அங்கு போதைப்பொருள் பொட்டலத்தை மறைத்து வைப்பதும், அதன் பின்பு அந்த இடத்தில் இருந்து போதைப்பொருட்களை போலீசார் எடுப்பதும் பதிவாகி இருந்திருக்கிறது. பின்னர் ராஜ்குமார், இந்த சி.சி.டி.வி. காட்சிகளை பதிவு செய்து கிராம மக்களுடன் இணைந்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்றார். போதைப்பொருள் வழக்கில் ராஜ்குமாரை சிக்க வைக்க போலீசாரும் உடந்தையாக இருந்து செயல்படுவதாக கூறி புகார் அளித்தனர். இந்த விவகாரம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+