சுய துதி, முகஸ்துதி.. உடல் பருமனை விட ஆபத்தான மன பருமன்? குறைக்க வழிகள் என்ன? டாக்டர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: உடல் பருமனை குறைக்க எத்தனையோ மெனக்கெடல்களை செய்யும் நாம் மன பருமனை குறைக்க எதையும் செய்வதில்லையே ஏன் என சிவகங்கை அரசு பொது மருத்துவர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நம்மில் அனைவருக்கும் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும் கண்ணுக்கு தெரியாத ஆனால் பிறரும் உணரக்கூடிய நோய் இது.. உடல் பருமன் குறைக்க எத்தனையோ மெனக்கெடும் நாம்.. மனப்பருமன் குறைக்க என்ன செய்கிறோம்??? மனப்பருமனா???

ஆம்... உடல் பருமன் எவ்வாறு பல நோய்களை உடலுக்கு கொண்டு வருகிறதோ? அதே போன்று மனப்பருமன் பல நோய்களை மனதுக்கு கொண்டு வருகிறது. உடல் பருமன் குறைக்க எளிதான தீர்வாக குறை மாவு நிறை கொழுப்பு ( பேலியோ) உணவு முறையும் ஓட்டமும் நடையும் விரதமும் இருக்கின்றது.

மன பருமன்

மன பருமன்

மனப்பருமன் குறைக்க நாம் செய்ய வேண்டிய பயிற்சிகள் மிகக் கடுமையானவை. ஆனால் மிகுந்த பலன் தரக்கூடியவை. ஆம்.. வெற்றி வந்தால் அமைதி தோல்வி வந்தால் பொறுமை ஒரு விசயத்தைக் கேட்டு முடிவு செய்யாமல் அது குறித்து இன்னும் தீர விசாரித்து
சிந்தித்து முடிவு செய்தல் முடிந்தவரை புறம்பேசாமை.

புறம்பேசாமை

புறம்பேசாமை

புறம் பேசும் இடங்களை தவிர்த்தல் நலம். நமக்கு சம்பந்தம் இல்லாத நமது தலையீடு தேவையற்ற விசயங்களில் தலையீடு செய்யாமை பிறரது பேச்சு/நடத்தை சுதந்திரத்தை மதிப்பது. நமது சுதந்திரம் பிறரது சுதந்திரத்தை பாதித்து விடாமல் பார்த்துக் கொள்வது. ஒவ்வொரு உயிருக்கும் பாகுபாடின்றி மரியாதை தந்து பழகுவது.

சுயமரியாதை

சுயமரியாதை

அவர்களது மற்றும் நமது சுயமரியாதைக்கு இழுக்கு நேராமல் காப்பது. முடிந்தவரை சுய புராணம் பாடாமல் முடிந்த அளவு தவிர்ப்பது. இது நாளடைவில் சுய துதியாக மாறி கூடவே முகஸ்துதி பாடுபவர்களை சேர்த்துக் கொள்ளச் செய்யும். இது ஆபத்தான மனநோய்க்கு இட்டுச்செல்லக்கூடும். சுய மதம் / சொந்த ஊர், நாடு/ சுய சாதி/ குடும்ப மகிமை இவற்றைப் பேசி பெருமை அடிப்பதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

வசதி வாய்ப்பு

வசதி வாய்ப்பு

காரணம் மேற்சொன்ன அனைத்தும் நமக்கு கிடைத்ததில் நமது பங்கு ஒன்றுமே இல்லை. நம்மை விட வசதி வாய்ப்பில் மேலிருப்பவரைக் கண்டு முடிந்தவரை பொறாமை கொள்ளாமை. அவர்கள் செய்த உழைப்பு மற்றும் தியாகத்தின் பலனால் இந்த நிலையை அடைந்திருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்தல். வசதி வாய்ப்பு மற்றும் பதவியில் கீழிருப்பவரை நிந்தனை செய்யாமை.

கண்ணீருக்கு காரணம்

கண்ணீருக்கு காரணம்


பிறர் கண்ணீருக்கு காரணமாக இருந்து விடாமை பிறர் கண்ணீர் விடக்கண்டால் அதை துடைக்க முயல்வது. செல்வம் அமரும் இருக்கைக்கு அருகில் செருக்கும் அமர்த்திவிடாமை ரகசியங்களை பேணுதல் பொன்நகையை விடவும் புன்னகையின் மதிப்பு அதிகம் என்று உணர்தல் செல்வத்தை ஈட்ட அறத்தை தியாகம் செய்யாமை முடிந்தவரை கடன் வாங்காமல் வாழ்வது வாங்கிய கடனை முறையாக வழங்குவது பணத்தால் உதவி செய்ய முடியாவிட்டாலும் ஊக்க வார்த்தைகளாலும் செயல்களின் மூலம் உதவி செய்ய முயல்வது.

உண்ண உடுக்க

உண்ண உடுக்க

உண்ண உடுக்க வாழ என்று பொருள் சேர்த்தல் நன்று. சில தலைமுறைகளுக்கும் பொருள் சேர்த்தல் நன்றன்று. துளியும் ஆதாரம் இல்லாத பல தகவல்களை தலையில் மனதில் ஏற்றிக்கொண்டு அவற்றைப் பரப்புவது. அறிவியல் ஆதாரமற்ற பல விசயங்களை முன்னோர்கள் செய்தார்கள் என்று கூறி நம்புவது இவ்வாறாக மனப்பருமன் ஏற்றும் பல விசயங்களை நாம் அனுதினமும் கடந்து வருகிறோம். இவற்றை முடிந்தவரை செய்து மனப்பருமன் குறைக்க தொடர்ந்து போராடுவோமாக...! உடல் பருமனை விடவும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+