ஓடிவந்து 'குர்-ஆன்' பரிசளித்த இளைஞர்.. சட்டென அண்ணாமலை செய்த செயல்.. வீடியோவை பாருங்க
சிவகங்கை: காரைக்குடி செக்காலை சாலை பள்ளிவாசல் அருகே இளைஞர் ஒருவர் "குர்-ஆன்" பரிசளித்தார். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்த செயல் "என் மண் என் மக்கள்" யாத்திரையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண்,என் மக்கள்' யாத்திரை சென்று வருகிறார். கடந்த ஜூலை 28-ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் ராமேசுவரத்தில் இந்த யாத்திரை தொடங்கி வைக்கப்பட்டது,.

அண்ணாமலையின் இந்த யாத்திரை ஒவ்வொரு நாளும் கிராமப் பகுதிகளில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், நகர்ப்புறங்களில் 4 தொகுதிகளையும் கடக்கும் வகையிலும் நடந்து வருகிறது. முதல்கட்டமாக 200 நாட்களுக்கு யாத்திரையை நடத்தப்படுகிறது. இதில் அண்ணாமலையுடன் பயணிக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இஸ்லாமிய சகோதரன் அன்புடன் கொடுத்த குரானை பணிவுடன் பெற்றுக்கொண்ட "அன்புள்ள அண்ணாமலையார்" 💖 #EnMannEnMakkal pic.twitter.com/3HtHgpoWxZ
— Sanghi Prince🚩 (@SanghiPrince) August 2, 2023
ராமேஸ்வரத்தில் தொடங்கிய 'என் மண்,என் மக்கள்' யாத்திரை 6வது நாளில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை கடந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தற்போது போய்விட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்த யாத்திரை ஆகஸ்ட் 2ம் தேதியான இன்று நடந்துள்ளது.

முன்னதாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் யாத்திரை நடந்த போது, காரைக்குடி செக்காலை சாலை பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய இளைஞர் ஒருவர் "குர்-ஆன்" பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார். உடனே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குரானை கண்ணில் வைத்து ஒத்திக்கொண்டார். அண்ணாமலையின் இந்த நடை பயணத்தின் போது, பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா உடன் இருந்தார். பாஜக நிர்வாகிகள் பலரும் அவருடன் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை அறந்தாங்கி தொகுதியில் ஆயிரம் குழந்தைகளுக்கு பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட "செல்வமகள்" திட்டத்தை துவங்கி வைத்து, அதன் முதல் தொகையை தமிழக பாஜகவே செலுத்தும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.
-
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு












Click it and Unblock the Notifications