சிவகங்கை கோயில் நில ஆக்கிரமிப்பு புகார்.. வழக்கை சந்திக்க தயார்...முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேட்டி
சிவகங்ககை: சிவகங்கையில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் கோயில் நிலத்தை அபகரித்ததாக கூறப்பட்ட இடத்தை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புகார் என முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை நகர் தெப்பக்குளம் அருகே இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் கெளரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான 142 ஏக்கர் நிலம் உள்ளது.
சிவகங்கை - மேலூர் சுற்று சாலை சந்திப்பில் உள்ள இந்த இடத்தில் 11 ஏக்கர் இடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனுக்கு நெருக்கமானவர்கள் அபகரித்துள்ளதாக புகார் எழுந்தது.

கோயில் நிலம் மீட்பு
இது தொடர்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்க்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும் கடிதம் மூலம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இன்று இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி தலைமையிலான அதிகாரிகள் குழு சம்பந்தப்பட்ட இடத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டது.

அரசியல் காழ்புணர்ச்சி
கோயில் நில அபகரிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், என் மீது களங்கம் ஏற்படுத்த ஆளும் கட்சியினரால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கொடுக்கப்பட்ட புகார் என்று மறுத்தார். பிரச்சினைக்குரிய இடத்திற்கும் எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ சம்பந்தம் இல்லை என்றும் திட்ட வட்டமாக தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக வழக்கு தொடுத்தால் வழக்கை சந்திக்க தயார் என்றும் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.

பாண்டி மீது புகார்
முன்னதாக நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனுக்கு நெருக்கமான பாண்டி என்பவர் ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டினார் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு சென்ற அதிகாரிகள், நிலத்தை மீட்டு, கட்டடத்திற்கு சீல் வைத்ததுடன் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைத்தனர்.

பாஸ்கரன் மறுப்பு
கோயில் நிலத்தை அபகரித்தவர் மாஜி அமைச்சர் பாஸ்கரனுக்கு நெருக்கமானவர் என்று தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக செய்திகள் வெளியானதை அடுத்து , தனக்கு எதிராக ஆளும் கட்சியினர் செய்த சதி என்று மறுத்துள்ளார். வழக்கை சந்திக்க தயார் என்றும் அறிவித்துள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications