சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூர்க்கத்தனம்! இந்தியாவுக்கு தேசியமொழியே இல்லை.. இந்தியை திணிக்காதீங்க..சுப வீரபாண்டியன் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சிவகங்கை: திமுக சிந்திய ரத்தத்தால் இந்தி தொடர்ந்து எதிர்க்கப்பட்டு வருகிறது. இந்தியை திணிப்பவர்களுக்கு எந்த ஒரு அறிவார்ந்த மொழியையும் தெரியாது. மக்களின் உணர்வுகளும் புரியாது. அவர்கள் மூர்க்கத்தனமானவர்கள். இந்தியாவிற்கு தேசிய கீதம் உண்டு. தேசிய பறவை உண்டு. தேசிய விலங்கு உண்டு. இந்த நிமிடம் வரை தேசிய மொழி கிடையாது. எதிர்க்க எதிர்க்க இந்தி மொழியை திணிக்காதீர்கள் என சுப வீரபாண்டியன் ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.

மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக காலம் காலமாக தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அரசு தற்போதும் இந்தி திணிப்பதாக கூறி அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக தான் புதிய கல்வி கொள்கை, ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பை திமுக பதிவு செய்துள்ளது.

ஐஐடியில் ‛‛அவா’’ விடமாட்டார்.. அரசியலுக்காக இந்தியை திணிக்கும் மோடி-அமித்ஷா.. விளாசிய தயாநிதி மாறன்ஐஐடியில் ‛‛அவா’’ விடமாட்டார்.. அரசியலுக்காக இந்தியை திணிக்கும் மோடி-அமித்ஷா.. விளாசிய தயாநிதி மாறன்

பயிற்றுமொழியாக இந்தி

பயிற்றுமொழியாக இந்தி

இதற்கிடையே தான் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது. மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும் ஒரே பொது நுழைவு தேர்வு கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கும் தற்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

 சுப வீரபாண்டியன் பங்கேற்பு

சுப வீரபாண்டியன் பங்கேற்பு

இதற்கு வழக்கம்போல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. நேற்று திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு அருகே திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில், இந்தி திணிப்பை எதிர்த்து மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப வீரபாண்டியன் பங்கேற்றார். அப்போது இந்தி திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை, கல்லூரிகளுக்கான ஒரே நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், அதனை வாபஸ் பெற வலியுறுத்தப்பட்டது.

எதிர்ப்பதால் இந்தி திணிப்பு

எதிர்ப்பதால் இந்தி திணிப்பு

இதல் சுப வீரபாண்டின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛திமுக சிந்திய ரத்தத்தால் இந்தி தொடர்ந்து எதிர்க்கப்பட்டு வருகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் திமுகவை சேர்ந்தவர்கள். ம் இந்தியை எதிர்த்து கொண்டிருக்கிறோம். அவர்கள் திணித்து கொண்டு இருக்கிறார்கள். நாம் எதிர்க்கிறோம் என்பதால் அவர்கள் திணிப்பதை நிறுத்தவில்லை.

மூர்க்கத்தனம்

மூர்க்கத்தனம்

இந்தியை திணிப்பவர்களுக்கு எந்த ஒரு அறிவார்ந்த மொழியையும் தெரியாது. மக்களின் உணர்வுகளும் புரியாது. அவர்கள் மூர்க்கத்தனமானவர்கள். இந்தி திணிப்பு வெவ்வேறு வடிவங்களில் வந்து கொண்டிருக்கிறது. இந்தி பாட மொழியாக வந்தது. அடுத்து அலுவல் மொழியாக வந்தது. இப்போது பயிற்று மொழியாக கொண்டு வர . முயற்சிக்கின்றனர். அறிவியல் பாடங்களை பயிற்றுவிக்க இந்தியில் மொழி வளம் கிடையாது. இந்தியாவிற்கு தேசிய கீதம் உண்டு. தேசிய பறவை உண்டு. தேசிய விலங்கு உண்டு. இந்த நிமிடம் வரை தேசிய மொழி கிடையாது'' என கடுமையாக விமர்சனம் செய்தார்.

English summary
Hindi is constantly being opposed because of DMK's spilled blood. Those who impose Hindi do not know any intelligent language. People's feelings are not understood. They are outrageous. India has a national anthem. There is a national bird. There is a national animal. Till now there is no national language. Suba Veerapandian has aggressively said that do not impose Hindi language to oppose.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X