திமுகவை மிரட்டுறீங்களா திருமா.. ட்விஸ்ட் செய்யும் எல்.முருகன்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: திருமாவளவன் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற பெரிய டிமாண்டை வைத்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை மிரட்டி வருகிறார் என்றும், பாஜக, பாமகவைப் பற்றிப் பேச விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்குத் தகுதி இல்லை என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பாஜக, பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளை விமர்சனம் செய்வதற்கு முன்பு திருமாவளவன் தான் யார் என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

thirumavalavan mkstalin


சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி, மேப்பல் உள்ளிட்ட கிராமங்களில் பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், திருமாவளவன் எதோ ஒரு பெரிய கோரிக்கையை வைத்துள்ளார். அந்த டிமெண்டை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், அவர் அரசாங்கத்தை மிரட்டுவதற்காக, அதுவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டில் இருக்கும்போது அவரை மிரட்டும் விதமாக மது விலக்கு மாநாட்டை அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த கோரிக்கை குறித்து திருமாவளவனே தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் கேட்டிருப்பதை திமுகவினரும், விசிகவும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். அவர்களுடைய கூட்டணி, கொடுக்கிறார்களா, வாங்குகிறார்களா என்ற விஷயம் எங்களுக்குத் தெரியாது. பாஜகவைப் பற்றி, பாமகவைப் பற்றி பேச திருமாவளவனுக்கு யோகியதை இருக்கிறதா

திருமாவளவனுடைய கட்சி என்ன, அவர் யார் என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். திருமாவளவனுடைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமான கட்சி கிடையாது. அதேபோல, அது ஒட்டுமொத்த தலித் மக்களுக்கான கட்சியும் கிடையாது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறிப்பிட்ட சமுதாயத்திற்கானதாகத்தான் அவர் வைத்திருக்கிறார். எனவே, பாஜக, பாமகவைப் பற்றிப் பேச எந்தவித தகுதியும் திருமாவளவனுக்கு கிடையாது. முதல்வர் வெளிநாட்டுப் பயணத்தின்போது எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தார் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஏற்கனவே துபாய், ஸ்பெயின் உள்ளிட்ட நாட்டுக்குச் சென்ற ஈர்த்த முதலீடுகள் மற்றும் இப்போது ஈர்த்த முதலீடுகளின் நிறுவனங்கள் ஏற்கனவே சென்னையில் உள்ளன.

இந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் வெளிநாடு சென்றிருக்க அவசியம் இல்லை. இதனை சென்னையில் இருந்து உட்கார்ந்து கொண்டே செய்திருக்கலாம். அவர் தனது சொந்த வேலைகளுக்காகவோ, மருத்துவத்துக்காகவோ கூட சென்றிருக்கலாம். அதில் நான் தலையிட விரும்பவில்லை. அதனை வெளிப்படையாக சொல்லியிருக்கலாம். 17 நாட்கள் வெளிநாட்டுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்து வந்ததாக வெளித் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி. அனைத்தையும் இணைத்துதான் இந்த கூட்டணி இயங்கி வருகிறது. யூடியூப் சேனல்களை வரைமுறைப்படுத்துவது குறித்த கேள்விக்கு, அதற்காகத்தான் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம். மொபைல் வைத்திருப்பவர்கள் எல்லாரும் இன்று நிருபர் ஆகிவிட்டார்கள். சமூக பொறுப்புணர்வோடு அனைவரும் செயல்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+