தலைவிகளின் அதிகாரத்தில் கணவர்கள் மூக்கை நுழைத்தால்.. அவ்வளவுதான்.. அமைச்சர் பெரியகருப்பன் வார்னிங்!
சிவகங்கை: ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தில் தலைவிகளின் கணவன்கள் மூக்கை நுழைக்கக் கூடாது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊராட்சி மன்ற தலைவியின் கணவரோ அல்லது அவரது உறவினரோ பஞ்சாயத்து நிர்வாகத்தில் தலையிட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என அறிவுறுத்தியுள்ளார்.
கவுன்சிலர்கள் தவறு செய்தால் பதவி பறிக்கப்படும் என 2 நாட்களுக்கு முன்னர் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அமைச்சர் பெரியகருப்பன் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

கணவன்கள் தலையீடு
கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றியக் குழுத் தலைவர், என பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வரும் நிலையில் அமைச்சர் பெரியகருப்பன் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். பெண் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களின் அதிகாரத்தில் அவர்களின் கணவர்கள் எக்காரணத்தை கொண்டும் தலையிடக் கூடாது என மிக கறாராக தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் எச்சரிக்கை
உள்ளாட்சி மன்றங்களில் உள்ள பெண்கள் அதிகாரத்தில் அவர்களது கணவர்களோ, உறவினர்களோ தலையிட சட்டத்தில் விதி இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் அமைச்சர் பெரியகருப்பன். பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களது உறவினர்கள் அதிகாரத்தில் மூக்கை நுழைப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.

பெண் அதிகாரம்
பெண்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற காரணத்துக்காக தான் மகளிர் இட ஒதுக்கீடே கொண்டுவரப்பட்டது என்பதை அமைச்சர் பெரியகருப்பன் விளக்கியுள்ளார். இதனிடையே பெண் எம்.எல்.ஏ.க்களின் அதிகாரமும் தமிழகத்தில் கேள்விக்குறியாக இருப்பது கவனிக்கத்தக்கது. பல தொகுதிகளிலும் பெண் எம்.எல்.ஏ.வாக இருப்பவர்களின் மகன், கணவர், ஆகியோர் தான் நிழல் எம்.எல்.ஏ.வாக வலம் வருகின்றனர்.

2 அமைச்சர்கள்
நகர்ப்புறம் மற்றும் ஊரகம் ஆகிய இரண்டு அமைப்புகளிலும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் செயல்பாடுகளை அமைச்சர்கள் நேருவும், பெரியகருப்பனும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனால் கடந்த காலங்களை போல் நினைத்ததை எல்லாம் செய்ய முடியாத சூழல் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications