கவனிங்க.. ரேஷன் கடைகளில் ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தலாம்.. அமைச்சர் பெரியகருப்பன் கொடுத்த விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை : 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் ரேஷன் கடைகள் உட்பட அனைத்து கடைகளிலும் இப்போதே 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுவதில்லை என ஆங்காங்கே புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. புழக்கத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என்றும் அறிவித்துள்ளது.

Ration shops will receive 2000 rupees notes till september 30 : says Minister KR Periyakaruppan

பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23ஆம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். அதே சமயம், 2000 ரூபாய் நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை அனைத்து இடங்களிலும் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆனால், இப்போதே கடைகளில் 2000 நோட்டுகளை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ரேஷன் கடைகளிலும் பிங்க் நிற 2000 நோட்டுகளை வாங்க மறுப்பதாக ஆங்காங்கே சில புகார்கள் எழுந்தன. இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Ration shops will receive 2000 rupees notes till september 30 : says Minister KR Periyakaruppan

இன்று சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், "ரேசன் கடைகளில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட காலம் வரை ரூ.2,000 நோட்டுக்களை பயன்படுத்தலாம். ரேஷன் கடைகளில் மட்டுமல்ல, அனைத்து கடைகளிலும் செப்டம்பர் 30 வரை ரூ.2,000 நோட்டுக்களை பயன்படுத்தலாம்;

ரூ.2,000 நோட்டு பணபரிவர்த்தனையில் அனைத்து வங்கிகளுக்குமான சட்டங்கள் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். கூட்டுறவு வங்கிகளிலும், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

Ration shops will receive 2000 rupees notes till september 30 : says Minister KR Periyakaruppan

மேலும், முன்னர் 500, 1000 ரூபாய் செல்லாது என திடீரென அறிவித்ததைப்போல் இல்லாமல் இந்த முறை 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்பதை முன்னதாக தெரிவித்த மத்திய அரசிற்கும், ரிசர்வ் வங்கிக்கும் நன்றி. இந்த கால அவகாசத்தை உரியவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்க எந்தவித தடையுமில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். டாஸ்மாக் கடைகளில் 2,000 நோட்டுகள் வாங்கக் கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+