மாஸ்டர்மைண்டே இவர்தான்! கேமராவை திருப்பி! அந்த போட்டோவை காட்டிய ஓபிஎஸ் டீம்! எடப்பாடி மீது பாய்ச்சல்
சிவகங்கை: காரைக்குடியில் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் முக்கியமான சில குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏதாவது செய்து ஒற்றை தலைமையை பெற்றுவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார்.
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்த வேண்டும். அதில் பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்ற திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

ஓபிஎஸ் பிளான் என்ன
இந்த நிலையில் பொதுக்குழுவை கூட்ட தடை வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார். அதன்படி அதிமுக பொதுக்குழு, தலைமைக்குழு விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு அளித்துள்ளார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இருக்கும் போது தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்று மனுதாக்கல் செய்துள்ளார். அதேபோல் கடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் இன்னொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கு
அதாவது கடந்த பொதுக்குழுவில் உயர் நீதிமன்ற உத்தரவு மதிக்கப்படவில்லை என்று அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது போக அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவையும் தாக்கல் செய்துள்ளார். பொதுக்குழு தொடர்பாக யார் வழக்கு தொடுத்தாலும் தன்னுடைய வாதத்தை கேட்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடுத்துள்ளது. பொதுக்குழுவிற்கு சட்ட ரீதியாக தடை பெற அனைத்து பக்கங்களிலும் ஓபிஎஸ் முயன்று கொண்டு இருக்கிறார்.

ஓபிஎஸ் முயற்சி
இந்த நிலையில்தான் காரைக்குடியில் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போராட்டம் செய்தனர். இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதோடு அதிமுக பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் மீது வாட்டர் பாட்டில் வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் பொதுக்குழுவில் ஓபிஎஸ் மீது வாட்டர் பாட்டில் வீசப்பட்டதை போட்டோவாக காட்டினார்கள். பாட்டில் வீசப்பட்டதை வட்டமிட்டு செய்தியாளர்களின் கேமரா முன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் காட்டினார்கள்.
Recommended Video

எடப்பாடி சதி
ஓபிஎஸ் இப்படி அவமதிக்கப்பட்டதற்கு எடப்பாடிதான் காரணம். அவர் சொல்லித்தான் ஓபிஎஸ் மீது வாட்டர் பாட்டில் வீசப்பட்டது. திட்டமிட்டு எடப்பாடி ஓபிஎஸ்ஸை அவமானம் செய்துள்ளார். அவர்தான் அனைத்திற்கும் சூத்திரதாரி . எடப்பாடி சொல்லித்தான் எல்லாம் நடந்தது என்று அவர் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினர். ஓபிஎஸ் நிறைய விட்டுக்கொடுத்துவிட்டார். இனியும் அவர் விட்டுக்கொடுக்க கூடாது. அவர் இப்படியே விட்டுக்கொடுத்தால் அது நன்றாக இருக்காது என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.












Click it and Unblock the Notifications