தலைகள் சிதறும்.. சிவகங்கை மதன் போட்ட மாஸ்டர் பிளான்.. இப்போ 2 குரூப்புகளுக்கும் போலீஸ் ஆப்பு
சிவகங்கை: சிவகங்கை மதன் கொலை விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.. கொலையாளிகள் ஒவ்வொருவராக கைதாகி கொண்டிருக்கிறார்கள்.. இதனிடையே, ஜாமீனில் வெளியே வந்த மதனை, ராஜேஷின் நெருங்கிய நண்பரான மிதுன் மாணிக்கம் உள்ளிட்டோர் கொலை செய்ய திட்டமிட்டனர். இதுதொடர்பாக 2 தரப்பிலும் மாறி, மாறி சோஷியல் மீடியாவில் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதையடுத்து போலீசார் என்ன செய்தார்கள் தெரியுமா?
சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த 26 வயதான மதன் மீது கொலை வழக்கு உள்பட 14 வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கரடிப்பட்டியை சேர்ந்த சகோதரர்கள் சூர்யா (24), சுபாஷ் (23) ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மதன், பிறகு ஜாமீனில் வெளியே வந்திருந்தார். அதுமட்டுமல்ல, ஏற்கனவே 2 முறை கொலை முயற்சிகளில் இருந்து தப்பியவராம் இந்த மதன்..

சிவகங்கை மதன்
இந்த நிலையில், சிவகங்கை அருகே ஒக்கூர் மேலமங்கலத்தில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் பங்கேற்பதற்காக தனது காளையுடன் சென்றிருந்த மதன், கடந்த 18-ம் தேதி மதியம் பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்குகளில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பலை பார்த்து ஓடிய மதனை, கரும்பு தோட்டத்தில் சுற்றி வளைத்த அந்த கும்பல் வாள், அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
இந்த கொலை தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
7 பேர் கைது
விசாரணையில், மானாமதுரை அருகே வேலூர் முருகபாஞ்சானை சேர்ந்த மிதுன்மாணிக்கம், திருப்புவனத்தை சேர்ந்த அதிபதி ராஜா (26), உடைகுளத்தை சேர்ந்த பாலமுருகன் (19), ஏ.விளாக்குளத்தை சேர்ந்த பாபு (23), மானாமதுரையை சேர்ந்த சந்துரு (19), மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த மாணிக்கம் (26), உரப்பூரை சேர்ந்த பிரதீப் (28), காரைக்குடியை சேர்ந்த வாசு ஆகிய 8 பேருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகன், பிரதீப், பாபு ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், மேலும் 4 பேரை இப்போது கைது செய்துள்ளனர்.
ஸ்கெட்ச் போட்ட மதன்
இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகில் ராஜேஷ் என்பவரை கொலை செய்துள்ளனர்.. இந்த வழக்கில் A1 குற்றவாளியான அருண்பாண்டியன் கைதாகி, ராமநாதபுரம் ஜெயிலில் உள்ளார். இவரின் நெருங்கிய நண்பரான ரவுடி மதனுக்கு, ராஜேஷ் கொலை சம்பவத்திற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததில் முக்கிய பங்குண்டு. அதனால்தான் மதனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாமீனில் வெளியே வந்த மதனை, ராஜேஷின் நெருங்கிய நண்பரான மிதுன் மாணிக்கம் உள்ளிட்டோர் கொலை செய்ய திட்டமிட்டனர். இதுதொடர்பாக 2 தரப்பிலும் மாறி, மாறி சோஷியல் மீடியாவில் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
மதனின் அன்றாட நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்த மிதுன் மாணிக்கம் உள்ளிட்ட கும்பல், கடந்த 18ம் தேதி அவரை வெட்டிக் கொலை செய்துள்ளது. இவர்கள் மேலும் பலரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது" என்கிறார்கள்.
தலைகள் சிதறும்
இதனிடையே, சிவகங்கை கொலை சம்பவத்தை தொடர்ந்து, சுள்ளான் மதன் குரூப் மற்றும் மிதுன்மாணிக்கம் குரூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கங்களில், வாதங்கள் வெடித்துள்ளன.. ஒருவருக்கொருவர் தாறுமாறாக விமர்சித்தும், பகிரங்கமாக வார்த்தை தாக்குதலிலும் ஈடுபட துவங்கி விட்டனர்..
அதாவது "சுள்ளான் மதன் கொலைக்கு பழிக்குப்பழியாக விரைவில் தலைகள் சிதறும்" என்றெல்லாம் மதன் ஆதரவாளர்கள் பதிவிட்டுள்ளனர்.. உடனே மிதுன்மாணிக்கம் தரப்பினரும், பதில் மிரட்டல் வார்த்தைகளை பதிவிட்டுள்ளனர்.. ஆனால் 2 தரப்பினரின் பதிவுகளுமே வன்முறைகளை தூண்டும் வாசகங்களாக உள்ளன.. இதையும் கண்காணித்த சிவகங்கை சைபர் கிரைம் போலீசார், 2 தரப்பினரின் சோஷியல் மீடியா பக்கங்களையும் முடக்கி விட்டார்கள்.


Click it and Unblock the Notifications
