டோணியை ஆடு என்ற மாப்பிள்ளை

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

புதுடில்லி: மாமன் மச்சான் இடையே கிண்டல் செய்வது, பாராட்டுவது எல்லாம் ரொம்ப சகஜம்தான். கேப்டன் கூல் தல டோணியை, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர், ஆடு’ என்று கூறியது,சற்றுக் குழப்பத்தையே ஏற்படுத்தியது.

இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு கூறுவதுபோல, எதற்காக இப்படி திட்டினார் என்று சந்தேகம் உங்களுக்கு எழலாம். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக், டுவிட்டரில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். ஒரு ரசிகர், தல டோணி பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டார். அதற்கு, Legent GOAT’ என்று ஷோயப் பதிலளித்தார்.

Dhoni praised

இது என்னடா, அவர் டோணியை பாராட்டுகிறாரா, கிண்டல் செய்கிறாரா என்பது புரியவில்லையே என்று கேட்கலாம். அப்ப நீங்கள் நம்பள மாதிரி, டுவிட்டரில் சற்று வீக் என்று நினைக்கிறேன்.

டுவிட்டரில் GOAT என்றால், geatest of all time என்று அர்த்தமாம். சுருக்கமாகத்தான் எழுதுவார்களாம்.

அதாவது கிரிக்கெட் வரலாற்றில் தல டோணி மிகப் பெரிய ஜாம்பவான் என்று மாலிக் கூறியுள்ளார்.

Dhoni praised

அதைத் தொடர்ந்து, அவருக்கு டோணி ரசிகர்கள் மட்டுமல்ல, பலரும் பாராட்டு கூறி வருகின்றனர்.

அதெல்லாம் சரி, மாமன் மச்சான் விஷயம் எப்படி என்றுதானே கேட்கிறீர்கள். நம்ம ஊரு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் புருஷன் ஷோயப் மாலிக், நமக்கு உறவாக மாட்டாரா? அதான் டோணி – ஷோயப் மாலிக் இடையே மாமன் மச்சான் உறவு.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pakistan cricket player Shoiab Malik praises MS Dhoni as Legent GOAT

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற