பேட்டிங்கும் பிடிக்கல.. பவுலிங்கும் போடல! ஆனாலும் மேன் ஆஃப் தி மேட்ச் இவர்தான்.. அது எப்படி தெரியுமா
டெல்லி: பொதுவாக ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியிலும் பேட்டிங் அல்லது பவுலிங்கில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரருக்குத் தான் மேன் ஆஃப் தி மேட்ச் விருதைத் தருவார்கள். ஆனால், இங்கே ஒருவர் பேட்டிங்கும் பிடிக்காமல் பவுலிங்கும் போடாமல் ஆட்டநாயகன் விருதை வாங்கியிருக்கிறார். அது எப்படி இரண்டையும் செய்யாத ஒருவருக்கு மேன் ஆஃப்தி மேட்ச் விருதைத் தந்தார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம் இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
கிரிக்கெட்டில் பொதுவாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒருவருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்படும். சமீபத்தில் பெர்த்தில் நடந்த இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியில் கூட பும்ரா இந்த விருதைப் பெற்றிருந்தார்.

முதல் இன்னிங்கிஸில் 5 விக்கெட்கள், இரண்டாவது இன்னிங்கிஸில் 3 விக்கெட்கள் என மொத்தம் 8 விக்கெட்கள் வீழ்த்தியதால் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இரண்டும் செய்யவில்லை: ஆனால், இங்கே ஒருவர் பேட்டிங்கும் பிடிக்காமல் பவுலிங்கும் போடாமல் மேன் ஆஃப் தி மேட்ச் விருதைப் பெற்றுள்ளார். ஏதாவது ஏமாற்றி அல்லது ஃபிக்ஸிங் செய்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றாரோ என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.. அப்படி எல்லாம் அவர் செய்யவில்லை. உண்மையாகவே அவருக்குத் தான் தான் விருது தரப்பட்டுள்ளது.
பேட்டிங், பவுலிங் போடாமல் அது எப்படி மேன் ஆஃப் தி மேட்ச் விருது தந்தார்கள்.. இதற்குப் பின்னணி என்ன! இந்த ஆட்டம் எப்போது நடந்தது.. யாருக்கு இதுபோல தரப்பட்டது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
என்ன போட்டி: 1986ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தான் இதுபோல நடந்துள்ளது. ஷார்ஜாவில் நடந்த இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 143 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. கஸ் லோகி ஒரு மேட்ஸ்மேன் என்பதால் அவர் பவுலிங் எதுவும் போடவில்லை
அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 33.2 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பேட்டிங்கிலும் கூட அவர் 2 டவுனில் தான் ஆடுவார். ஆனால், ஒரு விக்கெட்டை மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்ததால் அவர் பேட்டிங்கும் பிடிக்கவில்லை.
எதற்காக ஆட்டநாயகன் விருது: சரி பேட்டிங்கும் பிடிக்கவில்லை, பவுலிங் போடவில்லை பிறகு எப்படி மேன் ஆஃப் தி மேட்ச் விருது கொடுத்தார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரும். அதற்குக் காரணம் அவரது ஃபீல்டிங்.. அந்த ஒருநாள் போட்டியில் அவர் மூன்று கேட்சுகள் மற்றும் இரண்டு ரன் அவுட்களை நிகழ்த்தினார். பாகிஸ்தானின் பேட்ஸ்மேன்கள், ஆல் ரவுண்டர்கல் என டாப் 8 பேரில் 5 பேர் அவுட் ஆக காரணமாக இவர் தான்.
பாகிஸ்தான் 143 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக இவரது ஃபீல்டிங்கும் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே இவருக்கு ஃபீல்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது தரப்பட்டுள்ளது. மேலும், வெறும் ஃபீல்டிங்கிற்காக மேன் ஆஃப் தி மேட்ச் விருது பெற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் கஸ் லோகி பெற்றார். இந்தக் காலத்தில் இதுபோல யாருக்காவது ஃபீல்டிங்கிற்காக மேன் ஆஃப் தி மேட்ச் விருது தரப்படுமா.. உங்கள் நினைவில் யாருக்காவது இதுபோல ஃபீல்டிங்கிற்காக மட்டும் ஆட்டநாயகன் விருது தரப்பட்டுள்ளதா என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications