தம்பி வைபவ் சூர்யவன்ஷி.. இவ்வளவு அவசரம் ரொம்ப தவறு.. பாகிஸ்தானிடம் வீழ்ந்த இந்திய அணி!
துபாய்: யு19 ஆசியக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறது. இதற்கு இந்திய அணி வீரர்களின் பேட்டிங் அணுகுமுறையே காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி அத்தனை பந்துகளை சிக்ஸ் அடிக்க முயற்சித்து பேட்டை சுழற்றியது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது.
யு19 வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இதனால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்திய அணி ஆயுஷ் மாத்ரே தலைமையில் களமிறங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 9 சிக்ஸ், 17 பவுண்டரி உட்பட 172 ரன்களை விளாசி தள்ளினார். இதன்பின் இமாலய இலக்கை நோக்கி இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி - ஆயுஷ் மாத்ரே கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
அதில் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 2 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஆரோன் ஜார்ஜ் 16 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து அதிரடியாக ஆடிய வைவப் சூர்யவன்ஷியும் 10 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். 10 ஓவர்கள் முடிவதற்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை பறி கொடுத்தது. இதனால் பாகிஸ்தானின் வெற்றி உறுதியாகியது.
இறுதியாக இந்திய அணி 26.2 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்தையும் சிக்சருக்கு அனுப்ப வேண்டும் என்று தீவிரமாக ஆடியதே தோல்விக்கு காரணமாக மாறியது.
அதிலும் வைபவ் சூர்யவன்ஷி கொஞ்சம் கூட நிதானம் காட்டவில்லை. 348 ரன்கள் என்ற இமாலய இலக்கு இருக்கும் போது, முதல் 10 ஓவர்களில் இத்தனை ரன்கள் அடித்தால் போதும் என்ற வகையில் சிறிய சிறிய இலக்கை நிர்ணயித்து விளையாட வேண்டும். முதல் 5 ஓவரிலேயே ஆட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பது தோல்வியில் மட்டுமே முடியும். இதனால் இந்திய யு19 வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டை புரிந்து விளையாட வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications