இந்தியாவை கண்டாலே எதிரணிகள் பயந்த காலம் இருந்தது.. கம்பீரால் புலம்பி தள்ளிய தினேஷ் கார்த்திக்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: சொந்த மண்ணில் தொடர்ந்து டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வருவது தொடர்பாக முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வீடியோ வெளியிட்டு விமர்சித்துள்ளார். இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவே எதிரணிகள் பயப்படும் காலம் இருந்தது என்று கூறிய தினேஷ் கார்த்திக், இந்திய அணியில் என்னதான் சிக்கல் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்திய அணி இவ்வளவு அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது கிடையாது. இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை அபாரமாக வென்று சாதனை பெற்றுள்ளது.

IND vs SA

25 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிருப்பது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தினேஷ் கார்த்திக் பேசுகையில், இந்திய மண்ணில் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் எதிரணிகள் அஞ்சுவார்கள். ஆனால் இப்போது இந்திய அணியுடன் விளையாட வேண்டுமென்றால் உற்சாகமாக இருப்பார்கள். கடந்த 12 மாதங்களில், இந்திய அணி 2வது முறையாக ஒயிட் வாஷ் ஆகி இருக்கிறது.

இது இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான காலம். உடனடியாக கடினமான முடிவுகளை எடுக்கவில்லை என்றால், நிச்சயம் சிக்கல் உருவாகும். இந்திய வீரர்களின் தரம் குறைவாக இருக்கிறதா? ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்களா? வேகம், ஸ்பின் இரண்டிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் வீழ்த்தப்படுகிறார்கள்.

எனக்கு தெரிந்தவரை ஆல்ரவுண்டர்கள் கூடுதலாக விளையாடி வருகிறார்கள். நிதிஷ் குமார் ரெட்டி நடப்பு உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் மொத்தமாகவே 14 ஓவர்களை மட்டும்தான் வீசி இருக்கிறார். அதேபோல் இந்த டெஸ்ட் தொடரில் 100 ரன்களுக்கு மேல் 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார்கள். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியில் 7 பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் விளாசி இருக்கின்றனர்.

இந்திய அணியால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும். திடீரென எப்படி இப்படியான சரிவு ஏற்படும் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். தினேஷ் கார்த்திக்கின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அச்தேபோல் இந்திய அணியின் சரிவுக்கு ரசிகர்கள் பலரும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை காரணமாக கூறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+