மேட்சுக்கு நடுவே.. திடீரென கேட்ட தமிழ் மொழி.. ஏய் அங்கே போடாதே.. மைதானத்தில் நடந்த சுவாரசியம்
சென்னை: ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மேட்சில் இன்று மைதானத்தில் திடீரென தமிழ் மொழியில் வீர்ரகள் பேசியது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா எளிதாக வென்றுவிட்டது. முதல் 2 போட்டிகளில் மிக எளிதாக ஆஸ்திரேலியா அணியை இந்தியா வீழ்த்தியது.

இந்த நிலையில்தான் தற்போது 3வது ஒருநாள் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. மேட்ச் நடக்கும் ராஜ்கோட் மைதானம் அதிக வெப்பம் கொண்ட மைதானம் ஆகும். இது பாலைவனத்திற்கு மிக அருகில் உள்ள மைதானம்.
அதனால் இங்கே பேட்டிங் முதலில் இறங்கும் அணிக்கு வானிலை ரீதியாக, வெயில் ரீதியாக சாதகமாக இருக்கும். சேசிங் செய்யும் போது இரவு வந்துவிடும் என்பதால் பேட்டிங் கொஞ்சம் கடினமாக இருக்கும். இந்த பீச்சும் முதலில் பேட்டிங் செய்ய வசதியாக இருக்கும்.
இதனால் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டியில் தற்போது ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் இறங்கி உள்ளது. இந்திய அணியில் இன்று ஆடும் இந்திய அணியில் வாஷிங்க்டன் சுந்தர் சேர்க்கப்பட்டு உள்ளார். கடந்த போட்டியில் அஸ்வின் சிறப்பாக ஆடிய நிலையில் இந்த போட்டியில் அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் இடத்தில் வாஷிங்க்டன் சுந்தர் களமிறக்கப்பட்டு உள்ளார். இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீ.), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
பேட்டிங்: இந்திய அணியின் பவுலிங்கை தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய வீரரக்ள் அடித்து வெளுத்துக்கொண்டு இருக்கின்றனர். முக்கியமாக எல்லா ஓவரில் கட்டாயமாக குறைந்தது ஒரு பவுண்டரியாவது அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடித்து வந்தனர். தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய வார்னர் 34 பந்தில் 56 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி அடக்கம்.
இன்னொரு பக்கம் 84 பந்தில் மிட்சல் மார்ஷ் 96 ரன்கள் எடுத்தார். 3 சிக்ஸ், 13 பவுண்டரி இதில் அடக்கம். இதேபோல் ஸ்மித் 61 பந்தில் 74 ரன்கள் எடுத்தார். அதேபோல் மார்னஸ் லாபிசேஞ்சும் இந்திய பவுலர்களை அடித்து வெளுத்து அரைசதம் கடந்து ஆடிக்கொண்டு இருக்கிறார்.
தமிழ் மொழி: இதில் தொடக்கத்தில் இந்திய பவுலர்கள் திணறினார்கள். ஆனாலும் மிடில் ஓவர்களில் 24 ஓவருக்கு பின் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது. முக்கியமாக குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
வாஷிங்க்டன் சுந்தர் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் 10 ஓவரில் 48 ரன்கள் மட்டும் எடுத்து பிரஷர் போட்டார். அவர் பவுலிங் செய்த போது கர்நாடக வீரர் கே எல் ராகுல் கீப்பிங் செய்தார். அவருக்கு தமிழ் தெரியும் என்பதால் சுந்தரிடம் அடிக்கடி தமிழில் பேசினார். இங்கே போடு.. அங்கே போடாதே என்று தமிழில் பேசினார். முன்பு தினேஷ் கார்த்திக் இப்படி செய்வார். அவர் இல்லாத நிலையில் தற்போது வாஷிங்க்டன் சுந்தரிடம் கே எல் ராகுல் இப்படி தமிழில் பேச தொடங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications