ரொம்ப பெரிய ரிஸ்க்! ரோஹித் மட்டும் இதை செய்யலைன்னா.. க்ளோஸ்! பாகிஸ்தான் மேட்சில் காத்திருக்கும் திக்
சென்னை; இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தில் ரோஹித் சர்மா அணியில் முக்கியமான மாற்றம் ஒன்றை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை வரும் சனிக்கிழமை நடக்க உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இது பார்க்கப்படுகிறது. 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. இதுவரை 7 முறை வரிசையாக பாகிஸ்தான் இந்தியாவிடம் வீழ்ந்து உள்ளது. அந்த கரையை போக்குவதற்காக இந்த முறை பாகிஸ்தான் களமிறங்கும். பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் நல்ல வலுவாக இருக்கிறது. கடந்த சில காலமாக பார்மில் இல்லாமல் இருந்த ரிஸ்வானும் பார்மிற்கு திரும்பி உள்ளார்.

பாகிஸ்தான் பேட்டிங்: இலங்கை அணி குஷால் மெண்டிஸ் அதிரடியால் 344 ரன்களை எடுத்தது. குஷால் இதில் 122, சமரவிக்ரம் 108 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினர். இதையடுத்து இறங்கிய பாகிஸ்தான் அடுத்தடுத்து அவுட்டாகி தோல்வி அடையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானின் டாப் ஆர்டரில் பாபர், இமாம் உல் ஹக் அவுட் ஆனாலும் கூட அப்துல்லா., ரிஸ்வான் கூட்டணி அமைத்து அதிரடியாக ஆடி வந்தனர். தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய அப்துல்லா 103 பந்தில் 113 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் உடல் முழுக்க அடியை வாங்கிக்கொண்டு ரிஸ்வான் 131 ரன்களை 121 பந்தில் எடுத்தார்.
( தூக்கி அடிக்கப்படும் இளம் வீரர்கள்! உள்ளே வரும் 2 ஜாம்பவான்கள்! இந்திய அணியில் ரோஹித் அதிரடி மாற்றம்)
இதன் மூலம் எட்டமுடியாத இலக்கு என்று நினைக்கப்பட்ட 345 ரன்களை வெறும் 48.2 ஓவரில் எடுத்து பாகிஸ்தான் வென்றது. இந்த போட்டி மூலம் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. முக்கியமாக இந்தியா பிட்சில் அவர்களின் ஆட்டம் சிறப்பாக உள்ளது.
சிக்கல்: அதே சமயம்இந்திய அணிக்கு நெருக்கடி என்றால் அது ஓப்பனிங் வீரர்கள்தான். முக்கியமாக ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இருவரும்தான். பாகிஸ்தான் அணியில் ஷீகீன் அப்ரிடி உள்ளிட்ட இடதுகை பாஸ்ட் பவுலர்கள் உள்ளனர் .இதில் இந்திய தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இருவருஇடதுகை பாஸ்ட் பவுலர்கள் பந்தில் திணற கூடியவர்கள். அதோடு எளிதாக அவுட்டும் ஆக கூடியவர்கள். இவர்கள் இருவருக்குமே இடதுகை பாஸ்ட் பவுலர்கள் என்றால் எளிதாக ஆட மாட்டார்கள். கடந்த டி 20 உலகக் கோப்பை போட்டிகளில் இருந்தே இவர்கள் திணறி வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த முறை இஷான் கிஷனை மீண்டும் அணியில் எடுத்து இருப்பது பெரிய ரிஸ்க்காக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதில் சுப்மான் கில்லை மீண்டும் அணியில் கொண்டு வரலாம். அவர் லெப்ட் ஹேண்ட் பவுலர்களை நன்றாக ஆட கூடியவர். நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்பவர். முக்கியமாக இப்போது நல்ல ரிதமிலும் இருக்கிறார்.
அப்படி இருக்கும் போது அவரை மீண்டும் கொண்டு வர வேண்டும். அவர் டெங்குவின் இருந்து மீண்டு பயிற்சியில் இணைந்து உள்ளார். முழுமையான ஆரோக்கியத்தோடு அவர் இருக்கிறாரா என்பது சந்தேகம்தான். அவர் ஒருவேளை ஆரோக்கியத்திற்கு திரும்பும் பட்சத்தில் அவரை அணியில் எடுப்பதற்கான முயற்சிகளை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா எடுக்க வேண்டும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications