இதுதான்டா ஹர்திக் பாண்டியா.. சரியான இடத்தில் த்ரோ அடித்த சிந்தனை.. வெற்றி கைமாறிய தருணம்!
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஹர்திக் பாண்டியா அமைந்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்களை குவித்தது.

சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்களை விளாசினார். அதேபோல் கடைசி நேரத்தில் வந்த ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 27 ரன்களை குவித்தார். இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜேக்கப் பெத்தல் 48 பந்துகளில் 105 ரன்களை விளாசினார்.
கடைசி 3 ஓவர்களில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 44 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது 18வது ஓவரை வீசிய பிம்ரா வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அவரது யார்க்கர் பந்துகளில் பெத்தல் - கரண் இருவருமே திணறினர். இதனை பிடித்துக் கொண்ட இந்திய அணி பவுலர்கள், தொடர்ச்சியாக யார்க்கரை வீசினர்.
தொடர்ந்து 19வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து சாம் கரண் விக்கெட்டையும் வீழ்த்தினார். தொடர்ந்து சிவம் துபே வீசிய கடைசி ஓவரின் முதல்க் பந்தில் பெத்தல் லாங் ஆஃப் திசையில் அடித்தார். அது நேரடியாக ஹர்திக் பாண்டியா கைகளுக்கு சென்றது. அப்போது பவுலர் எண்டில் த்ரோ அடிக்காமல் நேராக விக்கெட் கீப்பருக்கு த்ரோ அடித்தார்.
அதனை பிடித்த சஞ்சு சாம்சன் உடனடியாக பெத்தலை ரன் அவுட் செய்தார். இதனால் இந்திய அணியின் வெற்றி உறுதியாகியது. அழுத்தம் நிறைந்த சூழலில் ஹர்திக் பாண்டியா சரியான முடிவை எடுப்பதில் வல்லவராக இருக்கிறார். ஏனென்றால் பேட்டிங்கின் போது கடைசி ஓவரில் சிங்கிள் ஓடாமல் சிக்சரை விளாசி தள்ளினார். அதுவும் இந்திய வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications