இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 38 பேர் விடுதலை... உறவினர்கள் மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்; இலங்கை சிறைகளில் இருந்து இந்திய மீனவர்கள் 38 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் 38 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

38 fishermen released by Sri Lanka

இந்நிலையில், இன்று யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 30 பேரும், வவுனியா சிறையில் இருந்து 8 பேரும் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இலங்கை அரசின் வசம் உள்ளன. அவை அனைத்தையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thirty Eight fishermen, who arrested by Sri Lankan navy were released by Sri Lanka today.
Please Wait while comments are loading...