For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை நாடாளுமன்றத்தில் கைகலப்பை உருவாக்கிய ராஜபக்சே பேச்சு.. சபாநாயகர் மீது தாக்குதல்

இன்று காலை இலங்கையில் மீண்டும் நாடாளுமன்றம் கூடிய நிலையில் அங்கு ரணில் விக்ரமசிங்கே மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ராஜபக்சேவால் இலங்கை நாடாளுமன்றத்தில் கைகலப்பு- வீடியோ

    கொழும்பு: இன்று காலை இலங்கையில் மீண்டும் நாடாளுமன்றம் கூடிய நிலையில் அங்கு ரணில் விக்ரமசிங்கே மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு இருக்கிறது.

    இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது.

    இதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார். ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ராஜபக்சவிற்கு பெரும்பான்மை இல்லை என்று அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.

    [ரஃபேல் ஒப்பந்தம் அரசுகளுக்கு நடுவே நடந்ததே கிடையாது.. ஒரே போடாக போட்ட கபில் சிபல்]

    மீண்டும் கூடியது

    மீண்டும் கூடியது

    இந்த நிலையில் இலங்கையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடியது. இன்று ரணில் விக்ரமசிங்கே தனது பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் பிரதமராக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்தது. இதையடுத்து சபாநாயகர் கரு ஜெயசூர்யா தலைமையில் நாடாளுமன்றம் கூடியது.

    ராஜபக்சே பேசினார்

    ராஜபக்சே பேசினார்

    இதில் நாடாளுமன்றம் கூடிய சில நிமிடத்தில் ராஜபக்சே எழுந்து பேசியுள்ளார். ஆனால் அவர் சபாநாயகரின் அனுமதி இல்லாமல் பேசியதாக கூறப்படுகிறது. அவர் ரணிலை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    இருவருக்கும் மோதல்

    இருவருக்கும் மோதல்

    ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த எம்பிக்களும், அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை சேர்ந்த எம்பிக்களும் மாறி மாறி திட்டிக் கொண்டார்கள். இதை தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன் வந்த அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இரண்டு தரப்பு எம்பிக்களும் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டனர்.

    தாக்குதல் நடத்தினார்கள்

    தாக்குதல் நடத்தினார்கள்

    இந்த தாக்குதல் பெரிதாகவே சபாநாயகர் கரு ஜெயசூர்யா எல்லோரையும் அவர்கள் இருக்கையில் அமரும்படி கூறினார். ஆனால் அவரிடமும் ராஜபக்சே ஆதரவாளர்கள் சண்டையிட்டனர். இதில் அவர் ராஜபக்சே ஆதரவு எம்பியால் தாக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் நாடாளுமன்றம் இந்த மாதம் 21ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    English summary
    Big Turmoil in Srilanka: Rajapaksa supporters attacked Parliament speaker who is Pro-Ranil .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X