இலங்கை நாடாளுமன்றத்தில் "ஈழத் தமிழர்" என்ற வார்த்தையையே உச்சரிக்காமல் ஏமாற்றிய பிரதமர் மோடி?!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி "ஈழத் தமிழர்" என்ற வார்த்தையையே உச்சரிக்காமல் பேசியது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

செசல்ஸ் தீவுகள் மற்றும் மொரிசீயஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் அதிர்காரப்பூர்வமாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருப்பதால் ஈழத் தமிழரிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

Controversy on PM's Sri lanak visit

2 அறிக்கை ஏன்...?

இதற்கு ஏற்ப தமது இலங்கை பயணத்தை முன்னிட்டு பத்திரிகைகளுக்கு பிரதமர் மோடி அனுப்பியிருந்த அறிக்கையில், ஈழத் தமிழர் பிரச்சனை, 13வது அரசியல் சாசன திருத்தத்துக்கும் மேலான தீர்வு மற்றும் தமிழக மீனவர் பிரச்சனை என்பது போன்ற விஷயங்களும் இடம்பெற்றுள்ளன.

அதே நேரத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஈழத் தமிழர்கள் பற்றியோ 13வது அரசியல் சாசனத் திருத்தம் குறித்தோ எதுவும் குறிப்பிடவில்லை.

மாறாக இந்தியா- இலங்கை இடையேயான உறவுகள் குறித்து விவரித்திருக்கும் பிரதமர் மோடி போரை ஒருங்கிணைந்து வெற்றி கொண்டுள்ளீர்கள் என்று குறிப்பிட்ட கையோடு, காயம்பட்ட மக்களை அரவணைத்துச் செல்லுங்கள் என்று "ஈழத் தமிழர்"எனக் குறிப்பிடாமல் மறைமுகமாக மட்டுமே பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதமர் மோடியின் பத்திரிகை அறிக்கை மற்றும் நாடாளுமன்ற உரைகளை தனித்தனியே வெளியிட்டிருக்கின்றன இலங்கை தமிழ் பத்திரிகைகள். ஆனால் இந்த இரு அறிக்கைகளும் ஒரே நாளில் பிரசுரிக்கப்பட்டதால் பிரதமர் மோடியின் நாடாளுமன்ற உரை எனக் கருதி பத்திரிகை அறிக்கைகளை பல ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

Controversy on PM's Sri lanak visit

இலங்கை நாடாளுமன்றத்துக்கு வெளியே ஈழத் தமிழர் பிரச்சனை, மீனவர் பிரச்சனைகளைப் பற்றியெல்லாம் பேசிய பிரதமரின் அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது முக்கிய பிரச்சனைகளை குறிப்பிட்டுப் பேசாமல் பொத்தாம் பொதுவாக பேசியது ஏன் என்று தெரியவில்லை.

அப்படியானால் "எல்லாமே நாடகமா" என்பது ஈழத் தமிழர்களின் கேள்வியாக இருக்கிறது. திட்டமிட்டே இரு அறிக்கைகள் வெளியானது குழப்பமான, ஏமாற்றுத்தனமான ஒரு நடவடிக்கையா? என்ற கேள்வியும் இயல்பாக எழுப்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+