தனக்காக உயிரை தியாகம் செய்த பாதுகாவலர் மனைவி காலில் விழுந்த நீதிபதி.. வைரலாகும் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: துப்பாக்கிச் சூட்டில் பலியான தன் பாதுகாவலரின் மனைவி காலில் விழுந்து இலங்கை நீதிபதி கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ வைரலாக சுற்றி வருகிறது.

இலங்கையின் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் மாணிக்கவாசகர இளஞ்செழியன். பல முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியுள்ளார்.

மாங்குளத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்யா என்ற மாணவியின் பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கடுமையாக தண்டித்துள்ளார்.

கடந்த வாரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவரை நீதிபதி இளஞ்செழியன் சிறையில் அடைத்தார்.

துணிச்சல் தீர்ப்பு

துணிச்சல் தீர்ப்பு

இப்படி யாருக்கும் அஞ்சாமல், வளைந்து கொடுக்காமல் நல்ல தீர்ப்புகளை வழங்கி வந்துள்ளார் இளஞ்செழியன். இவரை கொலை செய்ய அடையாளாம் தெரியாத சிலர் முயற்சி செய்தனர். இளஞசெழியன் சென்ற கார் நல்லூரில் உள்ள சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.

துப்பாக்கி சூடு

துப்பாக்கி சூடு

இதில், நீதிபதிக்காக பாதுகாவலராக இருந்த சரத் பிரேமசந்திரா என்பவர் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். தன்னை காப்பாற்ற வந்து பலியான பாதுகாவலரின் வீட்டுக்குச் சென்று நீதிபதி இளஞ்செழியன் பாதுகாவலர் சரத் பிரேமச்சந்திராவின் மனைவி காலில் விழுந்து கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பாராட்டு குவிகிறது

பாராட்டு குவிகிறது

நீதிபதி மாணிக்கவாசகர இளஞ்செழியன் தமிழர், மெய்பாதுகாவலரோ சிங்களர். ஆனாலும், இன மற்றும் பதவி வேறுபாடின்றிமனசாட்சி உந்தியதாதல் இவ்வாறரு செய்த இளஞ்செழியன் செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டப்படுகிறது.

நீதிபதியின் உயர்ந்த உள்ளம்

இதனிடையே, தனக்காக உயிரை தியாகம் செய்த மெய்பாதுகாவலரின் இரண்டு பிள்ளைகளை தத்து எடுத்துள்ளார் நீதிபதி. அவர்களின் கல்வி முதல் அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளார் மனிதாபம் நிறைந்த நீதிபதி. இவ்வாறான தகவலுடன் வைரல் வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Srilanka Judge who fell down on his security's wife feet video going viral in social media.
Please Wait while comments are loading...