அமைச்சரை குரங்கோடு ஒப்பிட்ட மலிங்காவுக்கு ஓராண்டு தடை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி, கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. எளிதாக வெற்றிபெற வேண்டிய அந்த போட்டியில் இலங்கை சொதப்பியது.

இந்த நிலையில் 'இலங்கை அணியின் தோல்விக்கு வீரர்கள் உடல் தகுதி பிரச்சினை காரணமா என்பது பற்றி விசாரணை நடத்தப்படும்' என்று இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரா அறிவித்திருந்தார்.

இதுபற்றி டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, "கிளியின் கூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும்" என கூறியிருந்தார். அமைச்சரைதா் அவர் குரங்கோடு உவமைப்படுத்தியிருந்தார்.

விசாரணை

விசாரணை

இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அமைச்சரை விமர்சித்தது மட்டுமின்றி அனுமதியின்றி டிவி சேனலுக்கு பேட்டியளித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குழு

குழு

இதுதொடர்பாக, இலங்கை கிரிக்கெட்டின் கெளரவ செயலர் மோகன் டி சில்வா, தலைமை செயல் அதிகாரி அஷ்லே டி சில்வா, ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் அசெல ரெகாவா ஆகியோர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

மன்னிப்பு

மன்னிப்பு

அந்தக் குழு நடத்திய விசாரணையின்போது, தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட லசித் மலிங்கா, வாய்மொழியாக, மன்னிப்புக் கோரியதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஓராண்டு தடை

ஓராண்டு தடை

மலிங்காவை, ஓராண்டு இடைநீக்கம் செய்து தண்டனை விதித்தது இலங்கை கிரிக்கெட் அமைப்பு. ஆனால், அந்த தண்டனை, 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் வைக்கப்படும். அந்த 6 மாதங்களுக்குள் இதேபோன்ற தவறு மீண்டும் நடந்தால், தண்டனை செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தண்டனை கொடுப்பதை போல கொடுத்துவிட்டு அதை நிறுத்தியும் வைத்துள்ளது இலங்கை கிரிக்கெட் அமைப்பு. ஆனால், மலிங்காவின் அடுத்த ஒரு நாள் போட்டிக்கான வருவாயிலிருந்து 50 சதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இலங்கை அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இம்மாத இறுதியில் தொடங்கும் கிரிக்கெட் தொடருக்கான, தேர்வுக்குழுவில் மலிங்காவின் பெயரும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே மலிங்காவுக்கு இதை ஒரு எச்சரிக்கை வாய்ப்பாக இலங்கை கிரிக்கெட் அமைப்பு வழங்கியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Lasith Malinga was suspended for one year after the fast bowler pleaded guilty to a breach of contract by speaking to the media without permission, Sri Lanka's cricket board said here on Tuesday (June 27).
Please Wait while comments are loading...