For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதுவரை இல்லாத மாற்றம் .. இலங்கையில் இனப்படுகொலையான தமிழர்களுக்கு சிங்களர்கள் முதல்முறையாக அஞ்சலி

Google Oneindia Tamil News

இலங்கை: இலங்கையில் ராணுவத்தால் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்கள் முதல்முறையாக அஞ்சலி செலுத்திய காட்சி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தனி ஈழம் கேட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் போராடி வந்தனர். இதனால் விடுதலைப்புலிகளுக்கும் அந்தநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வந்தது.

கிருஷ்ணகிரியில் கனமழை.. கேஆர்பி அணையில் பெருக்கெடுத்த நீர்.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கிருஷ்ணகிரியில் கனமழை.. கேஆர்பி அணையில் பெருக்கெடுத்த நீர்.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இந்த போர் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவடைந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற இறுதி போரில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்ற இலங்கை ராணுவம் பச்சை குழந்தைகளையும் விட்டு வைக்காமல் கொன்றது.

பலாத்காரம்

பலாத்காரம்

அத்துடன் பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்தது. இந்த போரில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டிருப்பர். போர் என வரும் போது மக்கள் இருக்கும் பகுதிகளில் அணு ஆயுதங்களையோ குண்டுகளையோ வீசுவதோ துப்பாக்கிச் சூடு நடத்துவதோ கூடாது.

இலங்கை ராணுவம்

இலங்கை ராணுவம்

ஆனால் இலங்கை ராணுவமோ அந்த விதியை மீறி பொது மக்கள் இருக்கும் இடங்களில் குண்டுகளை வீசி கொத்து கொத்தாக படுகொலை செய்தது. இந்த விவகாரம் சர்வதேச நீதிமன்றம் வரை சென்றது. மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த போது நடந்த இந்த மா பாதக கொலைகளால் உலக அளவில் பெரும் கண்டனங்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தின.

பெரும்பான்மை சிங்களர்கள்

பெரும்பான்மை சிங்களர்கள்

இலங்கையில் பெரும்பான்மையான சிங்களர்கள் ராஜபக்சவுக்கு பெரும் ஆதரவாக இரு்நதனர். இதனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 மகிந்த ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச

அது போல் பிரதமராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றார். இந்த சமயத்தில்தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ராஜபக்சக்களுக்கு எதிராக சிங்கள மக்களே திரும்பினர். தமிழர்களை கொன்ற அதே மே மாதத்தில் மகிந்த ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்துவிட்டு உயிருக்கு அஞ்சி வெளிநாட்டுக்கு தப்புவதாக செய்திகள் வந்தன. அவரது வீடு உடைமைகள் தீக்கிரையாகின.

Recommended Video

    ஈழப்போர் நடந்த போது குஜராத் முதல்வராக இருந்த மோடி அந்த போரை எதிர்த்து குரல் கொடுக்கவில்லையே என சீமான் கேள்வி
    13 ஆண்டுகளில் முதல்முறை

    13 ஆண்டுகளில் முதல்முறை

    இந்த சூழ்நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக சிங்களர்கள், தமிழர்கள் என ஒற்றுமையாக போராட்டம் நடத்தி வருவகின்றன. தமிழர்கள் மீதான பகைமை எண்ணத்தை சிங்கள மக்கள் மறந்துவிட்டனர். இரு தரப்பினரும் நட்பாகவே பழகிய காட்சிகளை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் இலங்கை போர் நினைவு தினமான நேற்று போரில் கொல்லப்படட தமிழர்களுக்கு சிங்களர்கள் அஞ்சலி செலுத்தினர். இரங்கல் அறிக்கையையும் வாசித்தனர். 13 ஆண்டுகளில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு சிங்களர்கள் அஞ்சலி செலுத்துவது இதுவே முதல்முறையாகும்.

    English summary
    Sinhalese pay tribute to Ezha Tamils those who were killed in Srilanka final war 2009. This is first time in 13 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X