சூப்பர் மெஜாரிட்டியை நோக்கி தேசிய மக்கள் சக்தி.. இலங்கை தேர்தலில் அசத்திய அனுர குமார திசநாயக்க!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து வருகிறது அதிபர் அனுரகுமார திசநாயக்க அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி. தபால் வாக்கு எண்ணிக்கையில் 22 தேர்தல் மாவட்டங்களிலுமே தொடக்கம் முதலே முன்னிலை வகித்த NPP, நேற்று தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையிலும் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகவும், 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமாக, கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். ஆகவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற ஒரு கட்சியோ, கூட்டணியோ 113 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

அறுதிப் பெரும்பான்மை ஏன் தேவை?: 150 இடங்களுக்கு மேல் (மொத்த இடங்களில் 3ல் 2 பங்கு) வெற்றி பெற்றால் சிறப்பு மெஜாரிட்டி அதாவது அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும். அதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். எனவே, அனுர குமார திசாநாயக்கவின் ஜேவிபி கட்சிக்கு சிறப்பு மெஜாரிட்டி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு பெரியளவில் எழுந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்ற நிலையில், அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அவரது தேசிய மக்கள் சக்திக்கு வெறும் மூன்று இடங்களே இருந்தன. அந்த நிலையில், எந்தச் சட்டத்தையும் நிறைவேற்றும் நிலையில் தேசிய மக்கள் சக்தி இருக்கவில்லை. அவருக்கு ஆதரவு வழங்கி, பெரும்பான்மையை தரக்கூடிய நிலையிலும் எந்தக் கட்சியும் இருக்கவில்லை.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: எனவேதான், உடனடியாக அதிபராக தான் பதவியேற்ற அடுத்த நாளே நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த வழிசெய்தார் அனுரகுமார திஸநாயக்க. அதிபர் அனுர குமார திசநாயக்க அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி, நிச்சயமாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுவிடும் நோக்கத்துடன் களத்தில் நிற்கிறது.
இலங்கையில் அமைப்பு ரீதியான பல மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாக அனுர குமார திசநாயக்க வாக்குறுதிகளை அளித்தார். இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அமலில் இருந்தாலும், ஜனாதிபதி விரும்பிய மாற்றங்களைச் செய்ய, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை என்பது அவசியம். எனவே, உடனடியாக தேர்தலைச் சந்திக்க முடிவு செய்தார் அனுர.
ஒருவேளை, அனுரவின் தேசிய மக்கள் சக்திக்கு இந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், வேறு சிறு கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டு அரசாங்கத்தை அமைக்கப் பார்ப்பார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்றால், அது ஒரு நிலையற்ற அரசாக இருக்கும். அதிபர் அனுர திட்டமிட்டபடி அமைப்பில் மாற்றங்களைச் செய்ய முடியாமல் போகும்.
தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து முன்னிலை: ஆனால், தற்போது வெளியாகி வரும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, பெரும்பான்மை இடங்களை தேசிய மக்கள் சக்தி பிடிக்கும் என்றே தெரிகிறது. தபால் வாக்குகளில் அனைத்து இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது தேசிய மக்கள் சக்தி. மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் தற்போது வரை 16 தேர்தல் மாவட்டங்களில் தபால் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அங்கெல்லாம் 70% -க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது தேசிய மக்கள் சக்தி.
அதோடு, தேர்தல் டிவிஷன் வாரியாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இதுவரை வந்துள்ள அனைத்து தொகுதிகளிலுமே, அனுர அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தியே 70% -த்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. பதுளை, திஸமஹாராம, தங்காலை, பலபிட்டிய, ரத்கம, யாழ்ப்பாணம், ஹபராதுவ, அக்மீமன, காலி, அம்பலங்கோட, பத்தேகம உள்ளிட்ட தேர்தல் டிவிஷன்களில் தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
எதிர்க்கட்சிகள் காலி: இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 11% வாக்குகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவுடன் தேசிய ஜனநாயக முன்னணி (NDF) 5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலுடன் ஒப்பிடுகையில் NPP தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதே நிலை நீடித்தால், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை அக்கட்சி பெறும் எனக் கணிக்கப்படுகிறது. அதாவது தேசிய மக்கள் சக்தி 150 இடங்களைத் தாண்டி அபார வெற்றியைப் பெறக்கூடும்.
ஒட்டுமொத்தமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி,
தேசிய மக்கள் சக்தி (NPP) 1,085,411 (69.09% வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 220,945 (14.06%)
புதிய ஜனநாயக முன்னனி (NDF) 79,341 (5.05%)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 65,379 (4.16%) வாக்குகளை பெற்றுள்ளன.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications