இலங்கை சிறையில் இருந்து 83 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை சிறையில் இருந்து 83 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை சிறையில் இருந்து 83 தமிழக மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுவை மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைப்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. பின்னர் மீனவர்களை மட்டும் விடுவிக்கிறது இலங்கை அரசு.

ஆனால் மீனவர்களின் வாழ்வாதரமான விசைப் படகுகளை இலங்கை அரசு விடுவிக்க மறுத்து வருகிறது. மொத்தம் 178 படகுகள் இலங்கையில் உள்ளன.
இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில் 83 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு பரிந்துரைத்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் இந்திய பெருங்கடல் தொடர்பான மாநாடு நடைபெறும் நிலையில் மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications