தமிழக மீனவர்கள் 76 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழக மீனவர்கள் 76 பேர் விடுதலை- வீடியோ

  கொழும்பு: இலங்கை அரசு 76 தமிழக மீனவர்களை சிறையிலிருந்து விடுவிக்க முடிவுசெய்துள்ளது.

  கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்தனர் என பொய்யான குற்றச்சாட்டைக் கூறி, இலங்கை கடற்படை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்வது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

  Srilankan government announced that 76 Tamil fisher men will be released

  இந்நிலையில் இலங்கையின் பல்வேறு சிறைகளில் 80 மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

  இந்நிலையில், இலங்கை அரசு சிறைகளில் வாழும் தமிழக மீனவர்கள் 76 பேரை விடுதலை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. மீதமுள்ள நால்வரின் விடுதலை குறித்து எதுவும் கூறவில்லை.

  ஒருபக்கம் இலங்கை அரசு மீனவர் விடுதலையை அறிவித்தது. அதேநேரத்தில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 8 மீனவர்களை கைது செய்துள்ளது. எனவே, இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மீனவர்கள் பல்லாண்டு கோரிக்கையாக உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Srilankan government announced that 76 Tamil fisher men will be released from lankan prison.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற