மைத்ரிபால சிறிசேன, சந்திரிகா, சம்பந்தனுடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு!
கொழும்பு: இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்தியா- இலங்கை கூட்டு குழுவின் 9-வது மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் பயணமாக சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இலங்கை சென்றார். அம் மாநாட்டில் கலந்து கொண்ட சுஷ்மா ஸ்வராஜ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று கொழும்பில் அதிபர் மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். அப்போது இருதரப்பு வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பாக இருவரும் விவாதித்தனர். மேலும் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும் தெரிகிறது. பின்னர் முன்னாள் அதிபர் சந்திரிகாவையும் சுஷ்மா சந்தித்தார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பேசினார். ஈழத் தமிழருக்கான அரசியல் உரிமைகள், காணாமல் போனோரை விடுவித்தல், மனித உரிமை மீறல் விவகாரங்கள் குறித்து சுஷ்மாவிடம் சம்பந்தன் வலியுறுத்தினார். இச்சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications