13000 அடி ஆழத்தில்.. கடலுக்கு அடியில் முன்னோர்களின் மலை.. உள்ளே பார்த்தால்.. ஆ.. வியந்த விஞ்ஞானிகள்!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் கடலுக்கு அடியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பல விசித்திரமான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன.
கடல் எப்போதுமே பல அதிசயங்களை சுமந்து இருக்கும். மனிதன் பூமிக்கே மேலே இருக்கும் நட்சத்திரங்கள், கிரகங்கள் குறித்தெல்லாம் ஆராய்ச்சி செய்து வருகிறான்.
ஏன் நிலவிற்கு கூட மனிதன் சென்றுவிட்டு திரும்பிவிட்டான். அதோடு செவ்வாய்க்கு பல ரோபோக்களையும் அனுப்பிவிட்டான். ஆனால் இது வரை பூமிக்கு அடியில் இருக்கும் பல அதிசயங்களை மனிதன் முழுமையாக கண்டுபிடிக்கவில்லை.
முக்கியமாக கடலுக்கு அடியில் இருக்கும் பல விஷயங்கள் மனித குலத்திற்கு மர்மமாகவே இருந்து வருகிறது.
சூப்பர் சான்ஸ்! இந்திய விமான படையில் அக்னி வீரராக சேர இளைஞர்களுக்கு வாய்ப்பு.. தகுதி என்ன தெரியுமா?

ஆஸ்திரேலியா
அந்த வகையில்தான் ஆஸ்திரேலியாவில் கடலுக்கு அடியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பல விசித்திரமான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. ஆஸ்திரேலியா மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள இரண்டு கடல் பகுதிகளில் இந்த ஆய்வுகளை அவர்கள் செய்து உள்ளனர். இந்த ஆராய்ச்சியில் பல விசித்திரமான மீன்களை அவர்கள் பார்த்து உள்ளனர், வித்தியாசமான பறவைகள் போன்ற தோற்றம் கொண்ட மீன்கள். இவை வினோதமான தோற்றத்துடன் காணப்பட்டு உள்ளன.

அறிக்கை
Sciencealert என்ற ஆராய்ச்சி இதழில் இது தொடர்பாக ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது. இந்த கடல் பகுதி டைனோசர் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலுக்கு இடையில் இருக்கும் பகுதி இது. இங்குதான் விசித்திரமான உயிரினங்கள் கண்டுபிடுக்கப்பட்டு உள்ளன. கடலுக்கு அடியில் இதுவரை மனித குலம் பார்த்திடாத மீன் வகைகள், உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.

செடிகள்
அதேபோல் இதுவரை மனிதர்கள் பார்த்திடாத செடி வகைகளும் உள்ளே இருந்துள்ளன. இதுவரை தாவரவியல் பிரிவில் சேர்க்கவே படாத பல செடி வங்கிகள் இங்கே இருந்துள்ளன. இதில் உள்ளே மிகப்பெரிய மலைகளும் இருந்துள்ளன. கடலில் மூழ்கிய முன்னோர்கள் காலத்து மலைகள் உள்ளே இருந்துள்ளன. வெடிக்க காத்திருக்கும் எரிமலைகளும் சிறிய சிறிய அளவில் உள்ளே இருந்துள்ளன. சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் இந்த அதிசய மலைகளும், பாறைகளும், குகை போன்ற அமைப்புகளும் காணப்பட்டு உள்ளன.

அதிசயம்
இங்குதான் பறவை போன்ற புதிய தோற்றம் கொண்ட மீன்கள் இருந்துள்ளன. இவை பறவைகள் நீரில் மிதந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட தோற்றத்துடன் இருந்துள்ளன. இதுவரை புதிதாக மனித குலம் கண்டிராத 6 உயிரினங்களை இவர்கள் கடலுக்கு உள்ளே இந்த ஆய்வில் கண்டுபிடித்து உள்ளனர். இதற்கான புகைப்படங்களைதான் இவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். நமக்கே தெரியாமல் பூமியில் எவ்வளவு அதிசயங்கள் இருக்கின்றன என்பதற்கு ஆதாரமாக இந்த ஆய்வு அமைந்து உள்ளது.

மூன்றில் ஒரு பங்கு
இங்கே இருக்கும் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு உயிரினம் மனித இனம் இதுவரை கண்டுபிடிக்காத உயிரினமாக இருக்கும் என்கிறார்கள். சமீபத்தில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட அவதார் படத்தின் 2ம் பாகமான வே ஆப் வாட்டர் பாகத்தின் டிரைலர் வெளியாகியது. அதில் கடலுக்கு அடியில் உயிரினங்கள் இருப்பது போல காட்சிகள் பல வரும். அதில் காட்டப்பட்டது போலவே வித்தியாசமான தோற்றத்துடன் இந்த உயிரினங்கள் கடலுக்கு அடியில் இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து உள்ளனர்.