சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Alien ஆஸ்திரேலியாவில் ஏலியனா?.. ஒற்றைக் கண், நீண்ட கையுடன் வித்தியாசமான உயிரினம்.. என்னவா இருக்கும்?

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சிட்னியில் மழை பெய்ததற்கு பிறகு ஏலியன் போன்ற உயிரினம் உருவாகியுள்ளது காண்போரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Recommended Video

    Alien ஆஸ்திரேலியாவில் ஏலியனா?.. ஒற்றைக் கண், நீண்ட கையுடன் வித்தியாசமான உயிரினம்.. என்னவா இருக்கும்?

    ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் இந்த மழையால் விஸ்மோல் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.

    பல்வேறு நகரங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல ஊர்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. இதுவரை இந்த கன மழைக்கு 13 பேர் பலியாகிவிட்டனர்.

    2022ல் பூமிக்கு ஏலியன் வரும்.. பெரும் தண்ணீர் பஞ்சம், சுனாமி.. பாபா வங்கா பரபர கணிப்பு! 2022ல் பூமிக்கு ஏலியன் வரும்.. பெரும் தண்ணீர் பஞ்சம், சுனாமி.. பாபா வங்கா பரபர கணிப்பு!

    பேய் மழை

    பேய் மழை

    பேய் மழையால் ஏராளமானோரின் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    வித்தியாசமான உயிரினம்

    வித்தியாசமான உயிரினம்

    ஞாயிற்றுக்கிழமை வரை இந்த மழை நீடித்தது. இதையடுத்து படிப்படியாக குறைந்துவிட்டது. ஆங்காங்கே வெள்ளநீர் குறைந்து வருகிறது. இந்த நிலையில் சிட்னியின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடிந்த நிலையில் மாரிக்வில்லே பகுதியில் காலையில் ஜாக்கிங் சென்ற ஹாரி ஹேய்ஸ் ஒரு வித்தியாசமான உயிரினத்தை கண்டார்.

    முட்டை வடிவில்

    முட்டை வடிவில்

    அது முட்டை வடிவில் காணப்படுகிறது. ஒரே ஒரு கண் உள்ளது. யானைக்கு இருப்பதை போன்று தும்பிக்கை இருக்கிறது. இது பார்ப்பதற்கு ஏதோ வித்தியாசமான உயிரினம் போல் காட்சியளிக்கிறது. இதையடுத்து ஒரு குச்சியை கொண்டு ஹாரி அந்த உயிரினத்தை தொட்டார். ஆனால் அது எந்தவித அசைவையும் கொடுக்காமல் இருந்தது.

    தும்பிக்கை

    தும்பிக்கை

    இதையடுத்து அந்த தும்பிக்கை போன்று இருக்கும் பகுதியையும் ஹாரி அசைத்து பார்த்தார். இதையடுத்து ஹாரி தான் எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பினார். "சாலையில் கண்டேன். இது என்ன?" என கேட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த ஏராளமானோர் ஹாரிக்கு நிறைய பதில்களை கொடுத்து வருகிறார்கள்.

    சுறா மீனின் கரு

    சுறா மீனின் கரு

    ஒரு வேளை இது சுறாமீனின் கருவாக இருக்குமோ அல்லது வேறு ஏதாவது கடல் வாழ் உயிரினமாக கூட இருக்குமோ என நெட்டிசன் ஒருவர் பதில் அளித்துள்ளார். இன்னொருவரோ இது ஏலியன்தான் என்கிறார். இந்த வீடியோவை பார்த்த தாவரவியல் துறை நிபுணர் எல்லி, இது என்னாது, இது ஆஸ்திரேலியாவில் காணப்படும் ஒரு வித போசம் என்ற உயிரினத்தின் கருவாக இருக்கும் என நினைக்கிறேன்.

    என்னவாக இருக்கும்?

    என்னவாக இருக்கும்?

    ஆனால் எனக்கு சரியாக தெரியவில்லை. எனது நண்பர்களும் இதை போசமாக இருக்கும் என ஏற்க மறுக்கிறார்கள். இது என்ன என கேட்டுள்ளார். இன்னும் சிலர் இது வெட்டுமீனின் கருவாக இருக்கும் என்கிறார்கள். ஏதாவது விதையாக இருக்கும் அல்லது உருமாற்றமடைந்த தலைப்பிரட்டையாக கூட இது இருக்கும் என்றார்கள்.

    ஆய்வாளர்கள் குழப்பம்

    ஆய்வாளர்கள் குழப்பம்


    இணையத்தையே குழப்பிவிட்ட இந்த உயிரினம் குறித்து ஆய்வு நடத்த சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களும் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கும் இது என்னவென தெரியவில்லை. இது என்னவென்று உங்களுக்காவது தெரியுமா என பாருங்கள் மக்களே!

    English summary
    A small bizarre creature found after raining in Australia sturns Biologists.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X