"எப்படி இருக்கீங்க?".. மகளின் மழலை தமிழ் கேள்விக்கு தோனி பதில்.. வாவ் வீடியோ
சிட்னி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது மகள் ஸிவாவுடன் தமிழில் உரையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அது லட்சக்கணக்கில் லைக்குகள் அள்ளி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளார். அதனால் இப்போதெல்லாம் தோனி தன் பெரும்பாலான நேரத்தை குடும்பத்தினருடன் செலவழித்து வருகிறார். மீதி நேரம் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து கொள்கிறார்.

மழலை தமிழ்
ஆனால் எவ்வளவு பிஸியானாலும் தோனி தன் மகளை கொஞ்சுவதில் மட்டும் ஒரு சின்ன கேப் கூட விடுவதில்லை. மகள் செய்யும் குறும்புத்தனங்கள் ஆகட்டும், அவளது மழலை பேச்சாகட்டும், எதுவானாலும் அதை அப்படியே வீடியோ எடுத்து இணையத்தில் போட்டு விடுவார் தோனி.

தமிழில் உரையாடல்
அப்படித்தான் இப்போதும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் என்ன ஸ்பெஷல் என்றால், தமிழில் இருவரும் பேசுகிறார்கள்!! அந்த வீடியோவில், `எப்படி இருக்கீங்க?' என ஸிவா மழலை தமிழில் கேட்க, `நல்லா இருக்கேன்' என தோனி தமிலேயே பதிலளித்துள்ளார்.

பிடித்து போயிற்று
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘Greetings in Two languages' என்ற தலைப்பில் இதனை தோனி பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் பிரியர்களுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கே இந்த வீடியோ மிகவும் பிடித்து போயிற்று.
|
தோனி பதில்
இதனை தொடர்ந்து போஜ்புரி மொழியில் அதே கேள்வியை மகள் கேட்கிறார். அதற்கு போஜ்புரி மொழியிலேயே தோனி பதிலளிக்கிறார்.

செல்ல "தல"
என்னதான் பல மொழிகளில் தோனி பேசினாலும் தமிழில் பேசினாலே நமக்கு ஒரு தனி குதூகலம்தான். ஏற்கனவே சென்னையை தன்னுடைய 2-வது தாய்வீடு என்று அடிக்கடி தோனி சொல்வார். இதனாலேயே தோனியை நம்ம ஊர் ஆட்கள் "தல" என்று அவரை செல்லமாக கூப்பிட்டு வருகிறார்கள்.

லைக்குகள்
ஐபிஎல் விளையாட்டு போட்டிகளின்போது, அவர் ஒன்றிரண்டு தமிழ் வார்த்தை பேசினாலே அதற்கே கைதட்டல்கள் மைதானத்தில் காதை கிழிக்கும். அதுவும் "விசில் போடு" என்ற வார்த்தைக்கு இன்னமும் விசில்கள் பறந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது தோனி மகளுடன் பேசிய தமிழ் வீடியோவானது, லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications