பன்னீர் பீட்சா, சிக்கன் பீட்சா.. ஏன் பேய் பீட்சாவையும் தெரியும்! ஆனால் இது என்னங்க புது பீட்சா?
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இருக்கும் டொமினோஸ் பீட்சா தயாரிக்கும் நிறுவனம் தர்பூசணியை கொண்டு பீட்சா தயாரித்துள்ளது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பீட்சாவை வேறு ஒருவர் செய்த நிலையில் இந்த டொமினோஸும் முயற்சி செய்துள்ளது.
உணவுகள் என்றாலே எப்போதும் போல் இல்லாமல் ஒவ்வொன்றிலும் புதுமைகளை புகுத்திக் கொண்டே வர வேண்டும் என்பதுதான் பலரது விருப்பமாக இருக்கிறது. அந்த காலத்தில் இட்லி என எடுத்துக் கொண்டால் ஒரே மாதிரியான இட்லிதான் இருந்தது, மிஞ்சி போனால் டம்ளர் இட்லி, தட்டு இட்லியை தயார் செய்தனர்.
ஆனால் இன்று இட்லியில் எத்தனை வகைகள், காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, சேமியா இட்லி, சாக்லேட் இட்லி, கேக் இட்லி, மிளகாய் பொடி இட்லி, கீமா இட்லி, குஷ்பு இட்லி, ஓட்ஸ் இட்லி, பயத்தம் பருப்பு இட்லி, பொரி இட்லி, உருளை கிழங்கு இட்லி, பார்லி இட்லி, பன்னீர் இட்லி, சிக்கன் இட்லி, மட்டன் இட்லி என பல வெரைட்டிகள் வந்துவிட்டன.

எத்தனை வகைகள்
அது போல் தோசை என எடுத்துக் கொண்டாலும் மசால் தோசை, கம்பு தோசை, சிறு தானிய தோசை, ரவா தோசை, ஊத்தப்பம், ஆனியன் ஊத்தப்பம், பொடி தோசை, முட்டை தோசை, பன்னீர் தோசை, மஸ்ரூம் தோசை, பீட்சா தோசை, சாக்லேட் தோசை என பல்வேறு வெரைட்டிகள் உள்ளன. இந்த எண்ணிக்கையெல்லாம் குறைவுதான். பல இடங்களில் இதை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான இட்லி, தோசைகள் உள்ளன.

வெரைட்டி சாதம்
அது போல் சாதங்களிலும் பல வெரைட்டிகள் இருக்கின்றன. ஆங்கிலேயர்களின் உணவு வகையான பீட்சா, பர்கர், சாண்ட்விச், ஹேம்பர்கர் ஆகியவற்றிலும் நிறைய புதுவிதங்கள் புகுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் பீட்சா நிறுவனமான ஆஸ்திரேலியாவில் உள்ள டொமினோஸ் ஒருவரை செய்த புதுமையான பீட்சாவை தயார் செய்துள்ளது.

சமைப்பது பிடிக்கும்
ஆயில் பாட்டர்சனுக்கு சமைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். இவரது ஆர்வம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தாலே தெரியும். இவர் அவ்வப்போது அனைவருக்கும் பிடித்தமான உணவுகளை சமைத்து அதை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அது போல் இவரது சமையலை டிக்டாக்கிலும் வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகிறார்.

வீடியோ வெளியீடு
அந்த வகையில் இவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் செய்த சமையல் வீடியோவை யாராலும் எதிர்பார்க்க முடியாத ஒரு டிஷ்ஸை செய்துள்ளார். அதாவது தர்பூசணியில் பீட்சாவை செய்திருந்தார். இதை டிக்டாக்கிலும் இன்ஸ்டாவிலும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதை மற்றவர்களும் டேஸ்ட் செய்து பார்க்குமாறு ஆயிர் பேட்டர்சன் தெரிவித்துள்ளார்.
வட்ட வடிவில் தர்பூசணி
அந்த வீடியோவில் தர்பூசணியை வட்ட வடிவில் கட் செய்து அதை கிரில்லில் வைத்து வேக வைக்கிறார். பின்னர் பார்பிக்கு சாஸை போடுகிறார்கள். அதன் மேல் பீட்சாவுக்கு தேவையான பொருட்களை போட்டு மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார். அதிலிருந்து சீஸ் உருகும் வரை வேக வைத்து எடுத்தார். இந்த வீடியோவில் அவர் கூறுகையில், தர்பூசணி பீட்சாவை எல்லாரும் டிரை செய்து செய்து பாருங்கள்.

தர்பூசணி பீட்சா
5 நிமிடங்கள் தர்பூசணி பீட்சாவை ஓவனில் வைத்தால் போதும் என வீடியோவில் தெரிவித்துள்ளார். இதை அவர் சாப்பிட்டும் காட்டியுள்ளார். இந்த ரெசிபியை ஆஸ்திரேலியாவில் உள்ள டொமினோஸும் செய்துள்ளது. நெட்டிசன்களில் சிலர் இந்த ரெசிபியை வரவேற்கிறார்கள். இன்னும் சிலர் இந்த ரெசிபியை பிடிக்கவில்லை என்கிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications