For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனம் குளிர்ந்த விவசாயிகள்.. வேளாண்துறையில் வியத்தகு திட்டங்கள்.. சாதனை மன்னர் முதல்வர் பழனிசாமி!

2011 முதல் 2018 வரை வேளாண்மைத் துறையின் தமிழக அதிமுக அரசு பல்வேறு சாதனைகள் செய்துள்ளது.

சென்னை: கடந்த 8 ஆண்டுகளில் வேளாண்மைத் துறையின் தமிழக அதிமுக அரசு பல்வேறு சாதனைகள் செய்துள்ளது. அதில் முக்கியமான சாதனைகள் இதில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் கீழ் தமிழகத்தில் வேளாண் துறை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 4 முறை மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் தண்ணீர் வந்து, கடை மடை விவசாயிகள் வரை மண் குளிர்ந்து, மனம் குளிர்ந்து சந்தோசத்தில் இருக்கிறார்கள்.

Tamilnadu CM Palanisamys AIADMK governments achievements in Agri field

முதல்வர் பழனிசாமி ஆட்சியில் விவசாய மக்களுக்காக நிறைய நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசும் வேளாண் மக்களுக்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கடந்த 8 வருடங்களில் விவசாய துறையில் தமிழக அரசு வியத்தகு சாதனைகளை செய்துள்ளது.

இது தொடர்பான சென்ற கட்டுரையில் எவ்வளவு நலத்திட்டங்கள் செய்யப்பட்டது என்று பார்த்தோம். இந்த கட்டுரையில் இன்னும் என்ன மாதிரியான நலத்திட்டங்கள் விவசாயிகளை சென்று சேர்ந்து இருக்கிறது என்று பார்ப்போம். (முந்தைய கட்டுரையை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்)

முதல்வர் பழனிசாமி அவர்களின் அரசு செயல்படுத்திய முக்கிய திட்டச் சாதனை விபரம் பின்வருமாறு:

1. ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பொருளீட்டுக் கடன் தொகை 2011-12ஆம் ஆண்டு முதல் ரூபாய் ஒரு இலட்சத்திலிருந்து இரண்டு இலட்சமாக அதிகரிப்பு.

2. விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை இடைத்தரகர்களின் குறுக்கீடின்றி பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக, திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் புதியதாக விற்பனைக்குழுக்கள்.

3. விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளிலிருந்து வேளாண் விளைபொருட்களை பாதுகாத்திட, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூபாய் 150. 56 கோடி செலவில் 2 இலட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட 88 நவீன சேமிப்பு கிடங்குகள் மற்றும் 1,750 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 70 குளிர்பதன கிடங்குகள்.

4. விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களை விற்பனை செய்திட ஏதுவாக 65 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் திருச்சி மாவட்டம் கள்ளிக்குடியில் பல்வேறு நவீன வசதிகளுடன் 1000 கடைகள் கொண்ட மத்திய சந்தை .

5. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் சேமிப்பு கிடங்குகள், பரிவர்த்தனை கூடங்கள், வணிக வளாகம், குளிர்பதன வசதிகள், அலுவலக கட்டிடங்கள், எடை மேடைகள் மற்றும் பதப்படுத்தும் மையம் என மொத்தம் 100 உட்கட்டமைப்பு வசதிகள் 83 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

6. தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் , 39 கோடியே 7 இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பில் வேளாண் வணிக மையங்கள், உலர்களங்கள், சிப்பம் கட்டும் அறை போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம். 6,577 விளைபொருள்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 1 இலட்சத்து 73 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

7. தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்தும் பொருட்டு, 47 உணவு பதப்படுத்தும் திட்டங்களுக்கு 17 கோடியே 44 இலட்சம் ரூபாய் மானியம். தனியார் தொழில் முனைவோர் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட, 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் ஸ்ரீரங்கம் மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் உணவு பதப்படுத்தும் தொழில் முனைப்பு மற்றும் பயிற்சி நிலையங்கள்.

8. சந்தை உட்கட்டமைப்புகளை புதிதாக ஏற்படுத்திடவும், ஏற்கெனவே உள்ள சந்தை உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும் 83 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில் எலுமிச்சை, காய்கறி மற்றும் பழங்கள், வாழை, திராட்சை, இளநீர், புளி, மிளகாய், மலைக்காய்கறிகள் போன்றவற்றிற்கு சிறப்பு வணிக வளாகங்கள், குளிர்பதன கிடங்குகள், வாழை பழுக்கவைக்கும் கூடங்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பரிவர்த்தனைக் கூடம், சேமிப்பு கிடங்கு, அலுவலகக் கட்டடம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள்.

9. நதிப்பள்ளத்தாக்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகள், மலைப்பகுதிகள், பழங்குடியினர் வாழும் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் ஆகிய பகுதிகளில் மண் அரிப்பினைத் தடுத்து வேளாண் நிலங்களை பாதுகாக்க, 92 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் 1.36 லட்சம் ஏக்கர் பரப்பில் பணிகள்.

10. கால்வாய்ப் பாசன பகுதிகளில், வேளாண் விளை நிலங்களில் நீர் உபயோகத்திறனை அதிகரித்து, தலைமடை முதல் கடைமடை வரை ஒரே சீரான தண்ணீர் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கும் நோக்கத்துடன், 198 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில், 1.90 லட்சம் ஏக்கரில் வயல் வாய்க்கால்கள், சுழற்சி முறை நீர்ப்பாசனம், வயல்வடிகால்கள்

11. நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், பயிர்வளர்ச்சியின் முக்கிய காலகட்டத்தில் பாசனம் செய்வதற்கும், மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ், 34 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் 1,465 மழைநீர் சேகரிப்பு கட்டுமானங்கள்.

12. மானாவாரி பயிர்களின் முக்கிய பயிர்வளர்ச்சிக்காலங்களில் பாசனம் செய்திட, இராமநாதபுரம் மாவட்டத்தில் 3,018 பண்ணைக் குட்டைகள்.

13. திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நாவலூர் குட்டப்பட்டில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாட்டிலேயே முதன்முறையாக மகளிருக்காகப் பிரத்யேகமான தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 2011 ஆம் ஆண்டில் துவக்கம்.

14. வேளாண்மைக்கான ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், அதிகரித்து வரும் வேளாண் கல்விக்கான தேவையைப் பூர்த்தி செய்யவும், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2014 ஆம் ஆண்டில் மூன்று வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் துவக்கம்.

15. அனைத்து வேளாண்மைக் கல்லூரிகளிலும், 94 கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு,

16. புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் 2013-2014 ஆம் ஆண்டு முதல் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாண்டு வேளாண்மைப் பட்டயப் படிப்பு துவக்கம்

17. புதிதாக தொடங்கப்பட்ட ஆராய்ச்சி நிலையங்கள்

தேனி மாவட்டம் மலிங்காபுரம் கிராமத்தில் திராட்சை ஆராய்ச்சி நிலையம், .

சிவகங்கை மாவட்டத்தில் உணவு பதனிடும் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

செட்டிநாட்டில் மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், .

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் தாலூக்காவில் எலுமிச்சை

18. புதிதாக தொடங்கப்பட்ட மகத்துவ மையங்கள்

• திருவண்ணாமலை மாவட்டம், அத்தியேந்தல் கிராமத்தில் 2013 ஆம் ஆண்டு சிறுதானிய மகத்துவ மையம், கோயம்புத்தூரில் மூலக்கூறு மரபியல் மகத்துவ மையம், . செட்டிநாட்டில் மானாவாரி பண்ணைய மகத்துவ மையம், . மதுரையில் புதுமை ஆய்வு மகத்துவ மையம், . திருச்சிராப்பள்ளியில் மண்வளம் மகத்துவ மையம் மற்றும் பண்ணை மகளிர் அறிவு மேம்பாட்டு மகத்துவ மையம், . பட்டுக்கோட்டையில் எண்ணெய்ப் பனை மகத்துவ மையம் ஆகிய ஆறுமகத்துவ மையங்கள்.

19. இரண்டு கோடி ரூபாய் செலவில் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பூச்சிகள் அருங்காட்சியகம்.

10. அகில இந்திய அளவில் அரசுத் துறைகளில் முதன்முதலாக கோயம்புத்தூர் விதைப் பரிசோதனை நிலையம் பன்னாட்டு விதைப் பரிசோதனை குழுமத்தில் (ISTA) உறுப்பினர் ஆக அறிவிக்கை

21. தமிழ்நாடு நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை மூலம் பிரதம மந்திரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 2,770 நீர்வடிப்பகுதிகளில் 5 லட்சத்து 547 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் 677 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் நில மேம்பாட்டுப்பணிகள்.

  • நிலவள மேம்பாட்டின் கீழ் 1 லட்சத்து 18 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் நிலசமன்பாடு, கோடை உழவு, சம உயர வரப்பு, கல் வரப்பு மற்றும் தடுப்புச் சுவர் பணிகள்.
  • 2,792 கசிவு நீர்க்குட்டைகள், 10,743 பண்ணைக் குட்டைகள், 4,756 கால்நடைக் குட்டைகள், 6,894 அமிழ்வு நீர்க்குட்டைகள், 11,472 தடுப்பணைகள் மற்றும் 6,102 குளங்கள் தூர்வாருதல் ஆகிய பணிகள்.

22. விரைவில் அழுகும் தன்மை கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற விளைபொருட்களில் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பினை குறைத்து, மதிப்புக்கூட்டி விவசாயிகள் அதிக வருமானம் பெறுவதற்காக, 10 மாவட்டங்களில் 482 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவில் விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம்.

  • 509 சேகரிப்பு மையங்கள் 64 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் உருவாக்கம்.
  • உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துவதற்கு நடவடிக்கை.

23. விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதற்காக மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையில் அரசே கொள்முதல்.

24. பனை விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் பனைபாளையிலிருந்து நீரா பானம் தயாரிப்பதற்கும், நீரா பானம் மூலம் பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிப்பதற்கும் உரிய சட்டதிருத்தம்.

25. தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் புதிய கொள்கைகள் அறிமுகம்.

  • "தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை" -
  • தமிழ்நாடு வேளாண் விளை பொருட்கள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் 2019 கீழ்காணும் கொள்கைகள் விரைவில் அறிமுகம்.
  • தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் அமைப்பு கொள்கை
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X