For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிந்தவர்கள் திரும்பி வந்தால் பாராட்டலாம்.. 18 எம்எல்ஏக்களுக்கு முதல்வர் பழனிச்சாமி அழைப்பு

பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியது என்று 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    18 எம்எல்ஏக்களுக்கு முதல்வர் பழனிச்சாமி அழைப்பு-வீடியோ

    மயிலாடுதுறை: பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியது என்று 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பிற்கு இன்னும் பல நாட்கள் காத்திருக்க வேண்டும். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு வெவ்வேறு தீர்ப்புகள் வெளியாகி உள்ளது. இதனால் வழக்கு தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    18 MLA Disqualification: Will accept if they come back to us says, TN CM Palanisamy

    இந்த நிலையில், இந்த 18 எம்எல்ஏக்களை மீண்டும் கட்சிக்குள் இழுக்க ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு முயன்று வருகிறது. அடுத்த தீர்ப்பு வருவதற்குள் இவர்களை எப்படியாவது சமரசம் பேசி கட்சிக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்காக அடிக்கடி தூது அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மயிலாடுதுறையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி பேட்டி அளித்தார். காவிரி குறித்தும், எம்எல்ஏக்கள் வழக்கு குறித்தும் பேசினார்.

    அதில், 18 எம்எல்ஏக்கள் வழக்கில் இனிதான் தீர்ப்பு வரும். மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும். ஆனால் 18 பேரும் மீண்டும் வந்தால் நல்லதுதான். அவர்கள் மீண்டும் வந்தால் கட்சியில் சேர்த்துக் கொள்ள நாங்கள் தயார்.

    பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியது. அவர்கள் மீண்டும் வருவார்கள் என்று நினைக்கிறேன். தங்க தமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சட்டப்படி அமைச்சர் பதவி கொடுக்க முடியாது.

    காவிரி ஆணைய உறுப்பினர்களை கர்நாடகா விரைவில் அறிவிக்க வேண்டும். காவேரி ஆணைய கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும். இதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    காவிரியில் நீர் கிடைப்பது உறுதி செய்யப்படும். இப்போதுதான் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. போதிய நீர் வந்தவுடன் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வரும் என்றார்.

    English summary
    18 MLA Disqualification: Will accept if they come back to us says, TN CM Palanisamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X