பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சை கருத்து.. 2 பேர் மீது போலீஸ் வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் குறித்து ஆபாசமான முறையில் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட 2 விஜய் ரசிகர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக தன்யா ராஜேந்திரன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர் விஜய் நடித்துள்ள சுறா படத்தை பார்த்தபோது, நான் இடைவேளையில் வெளியே வந்துவிட்டேன் என்றும் சமீபத்தில் ஷாருக்கான் நடித்துள்ள இந்தி படத்தை பார்த்தபோது இடைவேளை வரை கூட பார்க்க முடியவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் எனது கருத்தை பதிவு செய்திருந்தேன்.

2 Vijay fans sued for defaming a woman journalist

இதையொட்டி விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பேர் எனது புகைப்படத்துடன் ஆபாச தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதற்கு காரணமான குறிப்பிட்ட 5 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளேன் என்று கூறியிருந்தார்.

TN woman dies in Saudi,body sent to native

இந்த நிலையில் போலீஸார் விசாரணை நடத்தி தற்போது 2 பேர் மீது வன்கொடுமைச் சட்டப் பிரிவு உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police have filed case against 2 Vijay fans for expressing defaming comments against a woman journalist.
Please Wait while comments are loading...