சென்னையில் தொடரும் பைக்ரேஸ் பலிகள்- காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் போலீஸ் எச்சரிக்கையையும் மீறி பைக் ரேஸில் ஈடுபட்டு படுகாயமடைந்த ஆதிகேசவன் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை மெரினாவில் நள்ளிரவு நேரத்தில் போலீசார் என்னதான் எச்சரித்தாலும் பைக் ரேஸ்கள் தொடர் கதையாகி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மெரினாவில் பைக் ரேஸ் நடத்தப்பட்டது.

21-year old killed in illegal bike race in Chennai

அப்போது எதிர்பாரதமாக விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியானார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினமும் பைக் ரேஸ் நடத்தப்பட்டிருக்கிறது.

இதில் விபத்து ஏற்பட்டு 2 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். இதில் கீழ்ப்பாக்கத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆதிகேசவன் (வயது 21) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையில் தொடர்ந்து ஏற்படும் பைக் ரேஸ் விபத்துகளை கட்டுப்படுத்தாவிட்டால் இத்தகைய மரணங்கள் தவிர்க்கப்பட முடியாதது. அத்துடன் பொதுமக்களும்க் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் போலீசார் உணர வேண்டும்.,

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
21 year old youth died in the road illegal bike race at Marina Beach.
Please Wait while comments are loading...