For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லையில்... தேசிய நெடுஞ்சாலையில் இருந்த 22 டாஸ்மாக் கடைகள் மூடல்

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 22 மதுக் கடைகளை தமிழக அரசு மூடியுள்ளது. இருப்பினும் பிற கடைகளையும் அரசு படிப்படியாக மூடுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் 2003ம் ஆண்டு அக்டோபர் அப்போதைய அதிமுக அரசு டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் மதுக் கடைகளைக் கொம்டு வந்து, 6500 மதுக்கடைகளை திறந்தது. இதில் தற்போது சுமார் 30,000 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசுக்கு மிகப் பெரிய வருமானத்தை டாஸ்மாக் கடைகள் அள்ளித் தருகின்றன. ஆனால் பாதித் தமிழகம் குடிகார மாநிலமாகி விட்டது.

22 Tasmac shops shut NH in Nellai dt

வயது வித்தியாசமே இல்லாமல் சிறுவர் முதல் பெரியவர் வரை மது அருந்தும் அவல நிலை ஏற்பட்டு விட்டது. பெண்களும் பெருமளவில் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மற்றும், கோயில், குடியிருப்பு, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள டாஸ்மாக கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 25 மீட்டர் தொலைவுக்குள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

மாநிலம் முழுவதும் இதற்காக அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதன்படி நெல்லை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையான கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் மற்றும் நெல்லை-மதுரை தங்க நாற்கர சாலையை ஓட்டி உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

புளியங்குடியில் 2, கடையநல்லூரில் 3, தென்காசி, வாசுதேவநல்லூர், வள்ளியூர் 1, சிவகரியில் 2, நெல்லையில் 8, சேரன்மகாதேவி, ராதாபுரம், நாஙகுநேரி லெவிஞ்சிபுரத்தில் தலா 1 என மொத்தம் 22 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

இதில் பணியாற்றிய ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ள வேறு கடைகளுக்கு மாற்றப்படுகின்றனர். மதுரை மண்டலத்தில் 200 கடைகளும், மாநில்ம் முழுவதும் சுமாராக 500 கடைகளும் தேசிய நெடுஞ்சாலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கும் நோட்டீஸ் கொடுத்து மூடப்பட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
TN govt has closed 22 Tasmac shops in the NH in Nellai dt and taking stepts to shut other shops too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X