ஆளுநர் மாளிகை எஸ்பி உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். ஆளுநர் மாளிகை எஸ்.பியும் இதில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.

தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி இன்று மதியம் நடந்த கூட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம் குறித்து அறிவித்தார். அதன்படி ஆளுநர் மாளிகை, சிபிசிஐடி-2, கன்னியாகுமரி எஸ்.பி ஆகியோர் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

3 IPS officers transferred by TN Home Secretary

கன்னியாகுமரி எஸ்.பி-யாக இருந்த துரை அந்த பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு ஆளுநர் மாளிகை எஸ்.பி-யாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் ஆளுநர் மாளிகை எஸ்.பி.யாக இருந்த பிரவீன் குமார் அபினவ், சிபிசிஐடி-2 எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் சிபிசிஐடி எஸ்.பி.யாக ஸ்ரீநாதா, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்களின் பணி மாறுதல் ஆணை அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
3 IPS officers transferred by Tamil Nadu Home Secretary Niranjan Marty. Governor's House SP Pravin Kumar Abhinav transferred to CBCID-2. Kanyakumari SP Durai transferred to Governor's House. CBCID-2 Sp Sri Nadha transferred to Kanyakumari.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற